

புதுடெல்லி: இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு சென்றார். அங்கு ஈரான் தூதர் முகமது ஃபத்தாலியை சந்தித்து, ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமேனி மறைவுக்கு இந்தியாவின் அனுதாபத்தை தெரிவித்தார்.
இந்திய அரசு சார்பில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார். முகமது ஃபத்தாலியுடன் விக்ரம் மிஸ்ரி உரையாடிய புகைப்படத்தை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஈரான் விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில் விக்ரம் மிஸ்ரி ஈரான் தூதரகம் சென்று இரங்கல் தெரிவித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.