வர்த்தக ஒத்துழைப்பு: இந்தியா - ஜமைக்கா ஒப்பந்தம்

வர்த்தக ஒத்துழைப்பு: இந்தியா - ஜமைக்கா ஒப்பந்தம்
Updated on
1 min read

கிங்ஸ்டன்: இந்தியா மற்​றும் ஜமைக்கா நாடு​களுக்கு இடையே பல் வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஜமைக்கா நாட்​டுக்கு 9 நாள் பயண​மாகச் சென்​றுள்ள வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்சங்கர், அந்​நாட்டு வெளி​யுறவு அமைச்​சர் காமினா ஜே.ஸ்மித்தை திங்​கள்​கிழமை சந்​தித்து விரி​வாகப் பேசி​னார்.

அதன் பின்​னர் செய்​தி​யாளர்களிடம் ஜெய்​சங்​கர் கூறிய​தாவது: டிஜிட்​டல் பரி​மாற்​றம், கலாச்​சா​ரம், விளை​யாட்டு மற்​றும் டிஜிட்டல் பணப்​பரிவர்த்​தனை ஆகிய துறை​களில் சமீபத்​தில் கையெழுத்​தான புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​களைச் செயல்படுத்துவது குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது.

கரீபியன் நாடு​களுக்​கான வர்த்தக நுழை​வாயி​லாக ஜமைக்கா திகழ்​கிறது. இந்​நாட்​டின் கிட்​சன் நகரில் இந்​திய உதவி​யுடன் ஊரக வாழ்​வா​தா​ரத் திட்​டம் வெற்​றிகர​மாக முடிக்​கப்​பட்​டுள்​ளது.

புய​லால் பாதிக்​கப்​பட்ட ஜமைக்​கா​விற்கு மனி​தாபி​மான அடிப்படை​யில் 30 டயாலிசிஸ் இயந்​திரங்​கள், 40 மீன்​பிடிப் படகு​கள் மற்றும் 200 ஜிபிஎஸ் கருவி​களை இந்​தியா வழங்கி வரு​கிறது. மேலும், ஐநா பாது​காப்பு கவுன்​சிலில் 2028-29 கால​கட்​டத்​திற்கு இந்​தியா தற்​காலிக உறுப்​பின​ராக ஜமைக்கா அளிக்​கும் ஆதரவை வரவேற்​கிறோம். இவ்​வாறு அமைச்​சர் ஜெய்​சங்​கர் கூறினார்​.

வர்த்தக ஒத்துழைப்பு: இந்தியா - ஜமைக்கா ஒப்பந்தம்
யுஏஇ துறைமுகம் மீது ஈரான் தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் - பிரதமர் மோடி கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in