உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி
Updated on
1 min read

ராய்ப்பூர்: உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்சங்கர் தெரி​வித்​தார்.

சத்​தீஸ்​கர் மாநிலம் ராய்ப்​பூரில் உள்ள ஐஐஎம் உயர்​கல்வி நிறு​வனத்​தின் 15-வது பட்​டமளிப்பு விழா​வில் மத்​திய அமைச்​சர் ஜெய்​சங்​கர் கலந்​து​கொண்​டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: உலக நாடு​களுக்கு இடையி​லான அதிகாரப் போட்​டி​யில் பெரும் மாற்​றங்​கள் நிகழ்ந்து வருகின்​றன.

கோவிட்​19, உலக அளவில் எழுந்த பொருளா​தார சவால்கள், பரு​வநிலை மாற்​றங்​கள் போன்ற பல்​வேறு பிரச்​சினை​களை உலக நாடு​கள் எதிர்​கொண்​டன. இந்​நிலை​யில், உலகளா​விய சவால்​களை​யும், நெருக்​கடிகளை​யும் நம் நாடு துணிச்​சலுடன் எதிர்​கொண்டு வருகிறது. உலகளா​விய பல நெருக்​கடிகளை இந்​தியா முறியடித்து முன்​னேறி வரு​கிறது.

உலக அரசி​யல் மாறி வரு​வதற்கு ஏற்ப, சில நாடு​களால் தங்​களை தகவ​மைத்​துக் கொள்ள முடிய​வில்​லை. தொழில்​நுட்​பம், எரிசக்​தி, ராணுவத் திறன், இணைப்பு வசதி​கள், வளங்​கள் ஆகிய அனைத்​தும் இன்று போர்க்​கருவி​களாக மாற்​றப்​பட்டு வரு​கின்​றன. கணிக்க முடியாத ஒரு​வித விநோத​மான சூழலில் உலக நாடு​கள் பாது​காப்​புக்​காக போராடி வரு​கின்​றன.

உலகின் பல நாடு​களில் இல்​லாத ஒரு நம்​பிக்கை நம் நாட்டில் உள்​ளது. கடந்த 10 ஆண்​டு​கள் சிறப்​பான நிர்​வாகத்தை நாம் அமைத்​துக் கொடுத்​ததே அதற்​குக் காரணம். அடுத்த 10 ஆண்​டு​களைக் கடந்​தும் அந்த நம்பிக்கை வேரூன்றி இருக்​கும். இந்​தியா பல்​வேறு உலகளா​விய அதிர்ச்​சிகளி​லிருந்து மீள்​திறன் கொண்ட ஒரு சக்​தி​யாக உரு​வெடுத்​துள்​ளது என்​ப​தே உண்​மை. இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர்​ பேசி​னார்​

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி
தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு: தொழிலாளர் நல ஆணையர் உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in