தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு: தொழிலாளர் நல ஆணையர் உத்தரவு

தவறினால் நடவடிக்கை என எச்சரிக்கை
தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு: தொழிலாளர் நல ஆணையர் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தேர்​தல் நடை​பெறும் நாளில் தொழிலா​ளர்​களுக்கு ஊதி​யத்​துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்​டும் என்று அனைத்து வகை நிறு​வனங்​களுக்​கும் தொழிலா​ளர் நல ஆணை​யர் உத்​தர​விட்​டுள்​ளார். விடுப்பு அளிக்​காத நிறு​வனங்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​றும் எச்​சரித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக தொழிலா​ளர் நல ஆணை​யர் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: கேரளம், புதுச்​சேரி சட்​டப்​பேரவை தேர்​தல் ஏப்​.9-ம் தேதி​யும், தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் ஏப்​.23-ம் தேதி​யும் நடை​பெறும் என இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டம் 1951-ன்​கீழ் தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டுள்ள அறி​வுரைகளின்​படி, தமிழகத்​தில் உள்ள தொழில் நிறு​வனங்​கள், தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​கள் உட்பட அனைத்து வர்த்தக நிறு​வனங்​கள், கடைகள், ஓட்​டல்​கள், தோட்ட நிறு​வனங்​கள், மோட்​டார் போக்​கு​வரத்து நிறு​வனங்​கள், பீடி - சுருட்டு நிறு​வனங்​கள், தொழிற்​சாலைகள், கட்​டு​மானம் உட்பட அனைத்து அமைப்​பு​சாரா தொழில்​களில் ஈடு​பட்​டுள்ள தொழிலா​ளர்​கள், பொதுத் துறை நிறு​வனங்​களில் பணி​யாற்​றும் தினக்​கூலி, தற்​காலிக, ஒப்​பந்த தொழிலா​ளர்​கள் உட்பட அனைத்து தொழிலா​ளர்​கள், பணி​யாளர்​களுக்​கும், தேர்​தல் நடை​பெறும் ஏப்.9 (வி​யாழன்), ஏப்​.23 (வி​யாழன்) ஆகிய நாட்​களில் வாக்​களிக்க ஏது​வாக அன்​றைய தினம் ஊதி​யத்​துடன் கூடிய விடுப்பு (Paid Holiday) வழங்​கப்பட வேண்​டும் என சம்​பந்​தப்​பட்ட நிறு​வனங்​கள், வேலை அளிப்​போர் கேட்​டுக்​கொள்​ளப்​படு​கின்​றனர்.தேர்​தல் நாளில் ஊதி​யத்​துடன் கூடிய விடுப்பு அளிக்​கத் தவறும் நிறு​வனங்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்.

புகார் தெரிவிக்​கலாம்: இதுதொடர்​பாக புகார் அளிக்க தொழிலா​ளர் நலத் துறை சார்​பில் மாநில, மாவட்ட அளவில் கட்​டுப்​பாட்டு அறை​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. விடு​முறை அளிக்​காத நிறு​வனங்​கள் குறித்து பொது​மக்​கள், தொழிலா​ளர்​கள் ஆகியோர் கீழ்க்​கண்ட கட்​டுப்​பாட்டு அறைஅதி​காரி​களை தொடர்​பு​கொண்டு புகார் தெரிவிக்​கலாம்.

அதி​காரி​களின் பெயர், செல்​போன் எண் விவரம்: தொழிலா​ளர் இணை ஆணை​யர், மாநில அளவி​லான ஒருங்​கிணைப்​பாளர், சென்னை - எல்​.ரமேஷ் (7904646090), சென்னை அமலாக்​கப் பிரிவு தொழிலா​ளர் உதவி ஆணை​யர்​கள்: முதல் வட்​டம் - எல்​.ஷோபனா (7299007334), 2-வது வட்​டம் - பி.பழனி (7904802429), 3-வது வட்​டம் - எஸ்​.சிவக்​கு​மார் (9043555123).இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு: தொழிலாளர் நல ஆணையர் உத்தரவு
சிஎஸ்கே ஹாட்ரிக் தோல்வி: 43 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி | ஐபிஎல் 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in