“தேசிய நலன் கரு​தியே கச்சா எண்ணெய் இறக்கும​தியை இந்தியா விரிவு​படுத்​துகிறது” - அமெரிக்க அமைச்​சர் ரூபியோ கருத்து

‘யாருடைய அச்​சுறுத்​தலும் இல்லை’
“தேசிய நலன் கரு​தியே கச்சா எண்ணெய் இறக்கும​தியை இந்தியா விரிவு​படுத்​துகிறது” - அமெரிக்க அமைச்​சர் ரூபியோ கருத்து
Updated on: 
1 min read

புதுடெல்லி: ரஷ்யா​வுடனான போரில் உக்​ரைனுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வரு​கிறது. இத​னால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்​முதல் செய்​யும் நாடுகளின் பொருட்​களுக்கு கூடுதல் வரி விதிக்​கப்​படும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி வரு​கிறார்.

இதனிடையே, தனது கச்சா எண்​ணெய் தேவை​யில் 80% க்​கும் அதி​க​மாக இறக்​குமதி செய்​யும் இந்​தியா, தனது விநியோக வலை​யமைப்பை 27 நாடுகளில் இருந்து 41 நாடுகளாக விரிவுபடுத்​தி​யுள்​ளது என்று கடந்த வாரம் மத்​திய அமைச்​சர் ஹர்​தீப் பூரி உறுதிப்​படுத்​தினார். இந்​நிலை​யில், 3 நாள் பயண​மாக இந்​தியா வந்​துள்ள அமெரிக்க வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ, பிரபல தனியார் சேனலுக்கு அளித்த பேட்​டி​யில் கூறியதாவது: கச்சா எண்​ணெய் இறக்​குமதியை விரிவுபடுத்​தும் இந்​தி​யாவின் நட​வடிக்கை, அமெரிக்​கா​வின் அழுத்​தத்​தால் அல்ல, மாறாக அதன் சொந்த நலன்​களுக்​காகவே எடுக்​கப்​பட்​டது.

இந்​தியா தனது எரிசக்​தித் தொகுப்பை விரிவுபடுத்​து​வதில் உண்மையான முன்​னேற்​றம் கண்​டுள்​ளது. அச்​சுறுத்​தல்​கள் அல்லது அதுபோன்ற காரணங்​களால் இந்​தியா அவ்​வாறு செய்யவில்லை. ஒரே ஒரு நாட்டை மட்டும் நம்பியிருப்பது, பெரும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இது ரஷ்ய எண்​ணெயைக் குறைவாக வாங்​கு​வதைப் பற்​றியது அல்ல, மாறாக அமெரிக்​கக் கச்சா எண்​ணெய், வெனிசுலா அல்​லது பிற மேற்​கத்​திய நாடுகளின் எண்​ணெயை அதி​க​மாக வாங்​கு​வதைப் பற்​றியது. அது இந்​தி​யாவின் நலன்​களுக்கு உகந்தது. இவ்​வாறு அவர் கூறினார்.

“தேசிய நலன் கரு​தியே கச்சா எண்ணெய் இறக்கும​தியை இந்தியா விரிவு​படுத்​துகிறது” - அமெரிக்க அமைச்​சர் ரூபியோ கருத்து
பின்லேடனைப் போல பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறார் தாவூத்: ஐ.நா. சிறப்பு பிரதிநிதியின் தவறான அறிக்கைக்கு இந்தியா பதிலடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in