

அமெரிக்க வர்த்தக அமைச்சர் லுட்னிக்
மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர்ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று கூறியதாவது: வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி முதல் இந்தியா, அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருதரப்பும் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளன. இந்த பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்தத்தின் இறுதி வடிவத்தை எட்டினோம்.
இருதரப்புக்கும் பலன் அளிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும் நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. கடந்த 2025-ம் ஆண்டில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் 8 முறை தொலைபேசியில் பேசி உள்ளனர். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். தற்போது அமெரிக்க வர்த்தக அமைச்சர் லுட்னிக் கூறியிருக்கும் தகவல் முற்றிலும் தவறானது.இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.