ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ரியாத் விமான நிலையம் மீதான ஏவுகணை தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ரியாத் விமான நிலையம் மீதான ஏவுகணை தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: ரியாத் விமான நிலையம் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்​திய தாக்​குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரி​வித்​துள்​ளது.

சவுதி அரேபி​யா​வின் தலைநகர் ரியாத்​தில் உள்ள கிங் காலித் சர்வ​தேச விமான நிலை​யத்​தின் மீது ஏமன் நாட்​டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​கள் நேற்று முன்​தினம் ஏவு​கணை தாக்குதல் நடத்​தினர். இந்த வாரத்​தில் ரியாத் சர்​வ​தேச விமான நிலை​யம் மீது நடத்​தப்​பட்ட மூன்​றாவது தாக்​குதல் இது​வாகும். இதில் வெளி​நாட்​டினர் உள்பட 12 பேர் கொல்​லப்​பட்​டனர். சுமார் 300 பேர் படு​கா​யம் அடைந்​தனர். கடந்த 10 ஆண்​டு​களில் சவுதி மண்​ணில் நடந்த மிகக் கொடிய தாக்​குதலாக இது கருதப்படுகிறது.

இது தொடர்​பாக மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் வெளியிட்டுள்ள அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: கடந்த சில நாட்​களாக ரியாத்​தின் கிங் காலித் சர்​வ​தேச விமான நிலை​யம் மீது தொடர்ச்​சி​யாக நடத்​தப்​படும் தாக்​குதல்​களை​யும், குறிப்​பாக அக்​டோபர் 10-ம் தேதி உயி​ரிழப்​பு​கள், காயங்​கள் மற்​றும் சொத்து சேதங்​களை ஏற்​படுத்​திய கொடூரத் தாக்​குதலை​யும் இந்​தியா வன்​மை​யாகக் கண்​டிக்​கிறது.

பொது​மக்​கள் மற்​றும் பொது​மக்​கள் பயன்​பாட்​டிலுள்ள உள்கட்டமைப்​பு​கள் மீது நடத்​தப்​படும் இத்​தகைய தொடர்ச்சியான தாக்​குதல்​கள் முற்​றி​லும் ஏற்​றுக்​கொள்ள முடியாதவை. அவை உடனடி​யாக நிறுத்​தப்பட வேண்​டும். சவுதி அரேபி​யா​வின் இறை​யாண்​மை​யைப் பாது​காப்​ப​தில் அந்​நாட்டு மக்​களு​ட​னும் அரசுட​னும் இந்​தியா ஒற்​றுமை​யுடன் நிற்​கிறது. அந்தப் பகு​தி​யில் விரை​வில் அமை​தி​யும் இயல்​புநிலை​யும் திரும்ப வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

களமிறங்​கும் அமெரிக்​கா?

ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​களுக்கு எதி​ரான தாக்​குதல்​களில் அமெரிக்க ராணுவம் உதவ வேண்​டும் என்ற சவுதி அரேபி​யா​வின் கோரிக்​கைளை ட்ரம்ப் நிர்​வாகம் தொடர்ந்து நிராகரித்து வருவதாக சர்​வ​தேச ஊடகங்​களில் செய்​தி​கள் வெளி​யாகின. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பிடம் செய்தியாளர் கேள்வி எழுப்​பி​னார். அதற்கு அவர், “இருக்​கலாம். நாங்​கள் அதை பரிசீலித்து விரைவில் முடிவெடுப்போம்" என்​றார்​.

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ரியாத் விமான நிலையம் மீதான ஏவுகணை தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்
‘ஓராண்டு வரை அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது’ - நிபந்தனை ஜாமீனில் சிஜேபி நிர்வாகிகள் விடுதலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in