பிரதமர்கள் மோடி, பார்ட் டி வெவர் முன்​னிலை​யில் இந்தியா, பெல்ஜியம் இடையே ஒப்பந்​தம் கையெழுத்து

பிரதமர்கள் மோடி, பார்ட் டி வெவர் முன்​னிலை​யில் இந்தியா, பெல்ஜியம் இடையே ஒப்பந்​தம் கையெழுத்து
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தியா வந்​துள்ள பெல்​ஜி​யம் பிரதமர் பார்ட் டி வெவர், பிரதமர் மோடியை நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது, பாது​காப்​பு, எரிசக்தி உள்​ளிட்ட துறை​களில் இருதரப்பு உறவை பலப்​படுத்​து​வது குறித்த புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

பெல்​ஜி​யம் பிரதமர் பார்ட் டி வெவர் 3 நாள் பயண​மாக இந்​தியா வந்​துள்​ளார். அவருடன் அந்​நாட்டு பாது​காப்​புத் துறை அமைச்​சர் தியோ பிராங்​கென் உள்​ளிட்​டோரும் வந்​துள்​ளனர். இந்​நிலை​யில், டெல்​லி​யில் பிரதமர் நரேந்​திர மோடியை, பெல்​ஜி​யம் பிரதமர் பார்ட் டி வெவர் நேற்று சந்​தித்​துப் பேசி​னார்.

இந்த சந்​திப்​பின்​போது இருதரப்பு வர்த்தக உறவை பலப்​படுத்​து​வது குறித்து பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. பின்​னர் வர்த்​தகம், பாது​காப்​பு, முக்​கிய கனிமங்​கள், தூய்​மை​யான எரிசக்​தி, சைபர்​குற்​றம் மற்​றும் தொழில்​நுட்​பங்​கள் ஆகிய துறை​களில் இரு நாடு​களுக்கு இடையே​யான ஒத்​துழைப்பை விரிவுபடுத்​து​வது தொடர்​பாக இரு நாடு​களுக்​கிடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இந்த சந்​திப்​புக்​குப் பிறகு இரு தலை​வர்​களும் செய்​தி​யாளர்​களுக்கு கூட்டாக பேட்டி அளித்​தனர். அப்​போது பிரதமர் மோடி கூறிய​தாவது: இன்று உலகம் பெரும் கொந்​தளிப்​பான ஒரு கட்​டத்​தைக் கடந்து செல்​கிறது. உலகின் பல பகு​தி​களில் மோதல்​கள் தொடர்​கின்​றன. உணவு, எரிபொருள் அல்​லது விநி​யோகச் சங்​கிலி என ஒவ்​வொரு துறையை​யும் இந்த நிச்​சயமற்ற தன்மை பாதிக்​கிறது.

இந்த சவாலான சூழலிலும், இந்​தி​யா​வின் பொருளா​தா​ரம் தனது வேகத்​தைத் தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளது. நடப்பு நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் இந்​தியா 7.8 சதவீத பொருளா​தார வளர்ச்​சி​யைப் பதிவு செய்​துள்​ளது. இந்​தி​யா​வின் பொருளா​தார எழுச்​சிப் பயணம், உலகுக்கு நம்​பிக்​கை​யின் ஆதா​ர​மாக​வும் புதிய வாய்ப்​பாக​வும் மாறி வரு​கிறது.

இந்​தி​யா​வும் பெல்​ஜிய​மும் சட்​டத்​தின் ஆட்​சி, பேச்​சு​ வார்த்தை மற்​றும் ராஜதந்​திரம் ஆகிய​வற்​றில் நம்​பிக்கை கொண்​டுள்​ளன. உக்​ரை​னாக இருந்​தா​லும் சரி அல்​லது மேற்கு ஆசி​யா​வாக இருந்​தா​லும் சரி, மோதல்​களை விரை​வில் முடிவுக்​குக் கொண்​டு​வர​வும், அமை​தியை நிலை​நாட்​ட​வும் மேற்​கொள்​ளப்​படும் அனைத்து முயற்​சிகளை​யும் நாங்​கள் ஆதரிக்​கிறோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

பெல்​ஜி​யம் பிரதமர் வெவர் கூறும்​போது, “இந்​தி​யா-ஐரோப்​பிய யூனியன் இடையே தாராள வர்த்தக ஒப்​பந்​தம் நிறைவேற்​றப்​பட்​டது ஒரு முக்​கிய மைல்​கல். இரு நாடு​களும் முன்​பை​விட மிக​வும் பரந்த மற்​றும் வியூக முக்​கி​யத்​து​வம்​ வாய்ந்​த உறவைக்​ கட்​டமைத்​து வருகின்​றன” என்​றார்​.

பிரதமர்கள் மோடி, பார்ட் டி வெவர் முன்​னிலை​யில் இந்தியா, பெல்ஜியம் இடையே ஒப்பந்​தம் கையெழுத்து
சட்டம் - ஒழுங்கு நிலவரம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்: பேரவையில் உதயநிதி - அமைச்சர்கள் காரசார விவாதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in