இந்தியாவும், வளைகுடா போரின் பொருளாதார விளைவுகளும்!

இந்தியாவும், வளைகுடா போரின் பொருளாதார விளைவுகளும்!
Updated on
2 min read

உல​கின் ஐந்​தில் ஒரு பங்கு எண்​ணெ​யும், இந்​தி​யா​வின் கச்சா எண்ணெ​யும் சமையல் எரி​வா​யும் கொண்டு வரப்​படு​கின்ற ஹார்முஸ் நீரிணை பிப்​ர​வரி மாத இறு​தி​யில் போர் பதற்​றத்​தால் மூடப்​பட்ட போது இந்தியாவின் நிலை ஏற்​கெனவே தீர்மானிக்கப்பட்​ட​தாக கருதப்​பட்​டது.

பத்​தில் ஒன்​பது பங்கு கச்சா எண்​ணெயை​யும் பாதிக்​கும் அதிகமாக சமையல் எரி​வா​யுவை​யும் வளை​குடா வழி​யாக இறக்குமதி செய்​யும் ஒரு நாடு இந்த இக்​கட்​டான சூழ்​நிலை​யில், பெட்​ரோல் நிலை​யங்​களில் நீண்ட வரிசை, காலி​யான சமையல் அறை, டாலருக்கு நிக​ரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற நெருக்​கடிகளை நோக்​கித்​தான் சென்​றிருக்க வேண்​டும். ஆனால், இந்​தக் காலக்​கட்​டத்​தில் முழு சில்​லறை விற்​பனை நிலை​யத்​தில் கூட பெட்​ரோல், டீசலுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட​வில்​லை. எந்​தவொரு வீட்​டிலும் சிலிண்​டர் பிரச்​சினை இல்​லை.

இது தற்​செய​லானதோ, அதிர்​ஷ்ட​வச​மானதோ அல்ல. இது அரசின் திட்​ட​மிட்ட ஒன்​றன் பின் ஒன்​றான நடவடிக்​கை​யின் விளை​வால் ஏற்​பட்​ட​தாகும். இறக்​கும​தி​யோடு தொடர்​புடைய 14.2 கிலோ எடை​யுள்ள சமையல் எரி​வாயு சிலிண்​டரின் விலை 1,600 ரூபாய் அளவுக்கு உயர்ந்​த​போதும், வீட்டு உபயோக சிலிண்​டரின் விலை சுமார் 900 ரூபா​யாக இருந்​தது. இது ஏழைகளுக்​கும் குறைவான விலை​யாகவே இருந்​தது.

எரிபொருள்​களைப் பொறுத்​தவரை சுமையை நுகர்​வோருக்கு அளிக்​காமல் அரசு தாங்​கிக் கொண்​டது. பெட்​ரோல், டீசலுக்​கான கலால் வரியை லிட்​டருக்கு 10 ரூபாய் குறைத்​ததன் மூலம் 1.7 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வரு​வாய் இழப்பு ஏற்​பட்​டது. உள்நாட்டு எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​கள், ஒரு வாரக் காலத்திற்​குள் சமையல் எரி​வாயு சுத்​தி​கரிப்பை அதி​கரித்து இறக்கும​தி​யால் ஏற்​படும் இழப்பை பெரு​மளவு ஈடு​செய்​தது.

அமெரிக்​கா​விலிருந்​தும், ரஷ்​யா​விலிருந்​தும் இறக்​குமதி செய்ததோடு புதிய எண்​ணெய் வழங்​கும் நாடு​களை​யும் இந்​தியா அணுகியது. இதனால் ஹார்​முஸ் நீரிணை வழி​யாக எரிபொருள் வரத்​தின் தேவை குறைந்​தது. மேலும், வீடு​களுக்கு சிலிண்டர்களுக்​குப் பதிலாக குழாய் மூலம் எரி​வா​யு, நிலக்கரியை எரி​வாயு ஆக்​கும் திட்​டம் பெட்​ரோலில் எத்​த​னால் கலத்​தல் போன்ற நீண்​ட​கால திட்​டங்​களுக்​கான நடவடிக்​கையை அரசு மேற்​கொண்​டது.

அந்​நிய செலா​வணி கணக்​கும், இதே முறை​யில் திறமை​யாக நிர்​வகிக்​கப்​பட்​டது. வெளி​நாட்டு நிறு​வனங்​களின் பங்​கு​கள் வாங்குவ​தில் மூலதன லாபங்​களுக்​கான வரி நீக்​கப்​பட்டு முழுமை​யான அணுகல் பாதைத் திட்​டத்​தின் கீழ், பங்​கு​கள் பெறுவது விரி​வாக்​கப்​பட்​டது. வெளி​நாடு​வாழ் இந்​தி​யருக்​கான புதிய டாலர் டெபாசிட் திட்​டம் கணிச​மான டாலர்​களைக் கொண்டு வரும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

<div class="paragraphs"><p><strong>வி.அனந்த நாகேஸ்வரன்</strong></p></div>

வி.அனந்த நாகேஸ்வரன்

தடை​யில்லா வர்த்தக ஒப்​பந்​தங்​களின் மூலம் எண்​ணெய், ஆபரணங்​கள் அல்லாத வணி​கப் பொருட்​கள், சேவை​கள் ஏற்​றுமதி 2026 ஏப்​ரல், மே மாதங்​களில் முந்​தைய ஆண்​டின் இதே காலத்​தை​விட 12 சதவீதம் அதி​க​மாக இருந்​தது.

எரிசக்​தி​யில் மட்​டுமின்றி பொது​வாக இறக்​கும​தியை சார்ந்திருப்பது மிகப் பெரிய பிரச்​சினை​யாக உள்​ளது. வணிக ரீதியான பற்​றாக்​குறை, தேச வரு​மானத்​தில் 8 சதவீத​மாக உள்ளது. இதில், எண்​ணெயை நீக்​கி​விட்​டால் 5 சதவீத​மாக​வும் எண்​ணெயை​யும் தங்​கத்​தை​யும் நீக்​கி​விட்​டாலும் மூன்​றரை சதவீத​மாக உள்​ளது.

போட்​டித்​தன்​மை​யுடன், உள்​நாட்டு உற்​பத்​தியை அதி​கரித்து ஏற்றும​தியை ஊக்​கப்​படுத்​து​வதன் மூலம் இந்​தப் பிரச்​சினைக்​குத் தீர்வு காண​முடி​யும். இது, திறன் பெற்​றவர்​கள் இல்​லாமல் சாத்திய​மாவது இல்​லை. எனவே இந்​திய இளைஞர்​களுக்கு வர்த்தகத் திறன் பயிற்சி தற்​போது போர்க்​கால அடிப்​படை​யில் மேற்​கொள்​ளப்​படு​கிறது.

- வி.அனந்த நாகேஸ்வரன், மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர்

இந்தியாவும், வளைகுடா போரின் பொருளாதார விளைவுகளும்!
மாத்தி யோசித்த ஆப்கன் பெண்களின் தொழில்முனைவு ‘சர்வைவல்’ கதை!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in