இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி, பொதுக் கூட்டம் - நடந்தது என்ன?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தல்
இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி, பொதுக் கூட்டம் - நடந்தது என்ன?
Updated on: 
2 min read

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி சார்​பில் டெல்​லி​யில் நேற்று பேரணி மற்​றும் கண்​டன பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இண்​டியா கூட்​டணி சார்​பில் நவம்​பர் 1-ம் தேதி டெல்லி​யில் பேரணி நடை​பெறும் என்று அறி​விக்​கப்​பட்​டது. இதன்​படி நேற்று மதி​யம் காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் உள்​ளிட்ட இண்​டியா கூட்​டணி தலை​வர்​கள் திறந்த வேனில் கன்​னாட்​பிளேஸில் இருந்து பேரணி​யாக புறப்​பட்​டனர். பின்​னர் ராம்​லீலா மைதானத்​தில் கண்​டன பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது.

இதில் காங்​கிரஸ் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா, சமாஜ்வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்​கிரஸ் தலை​வர் மம்தா, ராஷ்டி​ரிய ஜனதா தள மூத்த தலை​வர் தேஜஸ்வி யாதவ், கர்​நாடக முதல்​வர் சிவகுமார், தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி, இமாச்​சல பிரதேச முதல்வர் சுக்​விந்​தர் சிங், ஜார்க்​கண்ட் முதல்​வர் ஹேமந்த் சோரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். பல்​வேறு மாநிலங்​களில் இருந்து ஆயிரக்​கணக்​கான தொண்​டர்​கள் ராம்​லீலா மைதானத்​தில் குவிந்தனர்.

கூட்​டத்​தில் காங்​கிரஸ் தலை​வர் கார்கே பேசும்​போது, “பிரதமர் நரேந்​திர மோடி, தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரை பாது​காக்க முயற்சி செய்​கிறார். ஆனால் ஞானேஷ் குமார் பதுங்கு குழி​யில் இருந்​தா​லும் இந்​திய இளைஞர்​கள் அவரை கண்​டு​பி​டிப்​பார்​கள். பிரதமர் நரேந்​திர மோடி​யின் ஆட்சியை அகற்ற வேண்​டும். வாக்கு திருட்டை தடுத்து ஜனநாயகத்​தைக் காப்​பற்ற வேண்​டும்” என்று தெரி​வித்​தார்.

சமாஜ்வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் பேசும்​போது, “உத்​தரபிரதேச சட்​டப்​பேரவைத் தேர்​தலில் இரட்டை இன்​ஜின் அரசு, இரட்டை தோல்​வியை சந்​திக்​கும். தேர்​தல் ஆணை​யத்தை பயன்படுத்தி உத்​தர பிரதேசத்​தில் வெற்றி பெறலாம் என்று பாஜக கனவு காண்​கிறது. அந்த கனவு பலிக்​காது” என்​றார். திரிணமூல் காங்​கிரஸ் தலை​வர் மம்தா பானர்ஜி பேசும்​போது, “மேற்​கு​வங்க தேர்​தலில் நாங்​கள் தோற்​க​வில்லை, தோற்​கடிக்​கப்​பட்​டோம். ஞானேஷ் குமார் மேற்​கு​வங்​கத்​தில் வாக்​குத் திருட்​டில் ஈடுபட்டார். அவர் உடனடி​யாக பதவி விலக வேண்​டும்” என்று தெரி​வித்​தார்.

‘ஞானேஷ்குமார் சிறை செல்​வார்’

ராகுல் காந்தி பேசும்​போது, “நரேந்​திர மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் 3 பேரும் நாட்​டின் ஆன்மா மீது தாக்​குதல் நடத்தி வரு​கின்​றனர். வாக்கு திருட்​டுக்கு பொறுப்​பேற்று தலை​மைத் தேர்தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் உடனடி​யாக பதவி விலக வேண்​டும். அவர் சாதா​ரண திருட்​டில் ஈடு​பட​வில்லை. மக்​களின் வாக்​கு​களை திருடி உள்​ளார். ஜனநாயகத்​துக்கு விரோத​மாக செயல்​பட்டு உள்​ளார். இது தேசத்​துரோகம் ஆகும். எனவே ஞானேஷ் குமார் சிறைக்​குச் செல்​வது உறுதி. இவ்​வாறு ராகுல் காந்தி பேசினார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இண்டியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தை ஒட்டி ராம்லீலா மைதானத்தில் நேற்று 3,500-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த 1,000 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மைதானம் முழுவதும் கண்காணிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மட்டுமே ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதன்படி மாலை 5 மணி அளவில் பொதுக்கூட்டம் நிறைவுப் பெற்றது.

ரூ.12,000 கோடி வர்த்தகம் பாதிப்பு

டெல்லி ராம்லீலா மைதானத்தை ஒட்டி 8 முக்கிய சந்தைகள் உள்ளன. இண்டியா கூட்டணியின் போராட்டத்தால் இந்த 8 சந்தைகளும் நேற்று மூடப்பட்டன. இதனால் சுமார் ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக வணிகர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி, பொதுக் கூட்டம் - நடந்தது என்ன?
வங்​கக் கடலில் தீவிர புயலாக வலுப்பெறும் ‘முரசு' - இன்று நள்ளிரவில் ஆந்திராவில் கரையை கடக்கும்

X