​நீட் வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்த காந்தி ஸ்மிருதிக்கு சென்ற இண்டியா கூட்டணி தலைவர்கள்

​நீட் வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்த காந்தி ஸ்மிருதிக்கு சென்ற இண்டியா கூட்டணி தலைவர்கள்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்​லி​யில் மாணவர்​கள் போராட்​டம் தீவிரம் அடைந்​துள்​ளது. இது குறித்து மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி​யின் இல்​லத்​தில் நேற்று மதி​யம் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் பங்​கேற்​றனர். கூட்​டம் முடிந்​ததும், காந்தி ஸ்மிரு​திக்​குச் செல்​லும் திட்​டத்தை ராகுல் அறி​வித்​தார்.

இது குறித்து எக்ஸ் தளத்​தில் அவர் விடுத்த செய்​தி​யில், “தற்​போது, ‘இண்​டி​யா’ கூட்​ட​ணி​யின் எம்​பிக்​களும் தலை​வர்​களும் அமை​தி​யான முறை​யில் போராட்​டம் நடத்த காந்தி ஸ்மிரு​தியை நோக்​கிச் செல்​கிறோம்.

நீட் தேர்​வுத் தாள் கசிவுக்​குப் பிறகு உயிர் நீத்த மாணவர்​களை நினை​வு​கூர​வும், அமை​தி​யான முறை​யில் போராடி, போலீ​ஸாரின் தடியடி​யில் காயமடைந்து கிடக்​கும் மாணவர்​களு​டன் துணை நிற்​கச் செல்​கிறோம். இந்​தி​யா​வின் மாணவர்​கள் தனி​யாக இல்​லை. முழு எதிர்க்​கட்​சி​யும் அவர்​களு​ட​னும் துணை நிற்​கிறது” என தெரி​வித்​தார்.

காங்​கிரஸ் எம்பி பிரி​யங்கா காந்தி வத்ரா மற்​றும் எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் 3 பேருந்​துகளில் ஏறி காந்தி ஸ்மிரு​திக்கு சென்​றனர். முதலில் இந்​தியா கேட் பகு​தி​யில் போராட்​டம் நடத்த எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் திட்​ட​மிட்​டனர். ஆனால், அதற்கு போலீ​ஸார் அனு​மதி வழங்​காத​தால் அரு​கே​யுள்ள காந்தி ஸ்மிரு​திக்கு (காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இடம்) சென்​றனர்.

டெல்லி ஜந்​தர் மந்​தரில் கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி சார்​பில் தனி​யாக போராட்​டம் நடை​பெற்று வரு​கிறது. இதனால், போராட்​டம் நடக்​கும் இடத்​திலிருந்து 1.5 கி.மீ சுற்​றள​வில் மொபைல் இணைய சேவை நேற்​று நள்​ளிர​வு வரை துண்​டிக்​கப்​பட்​டது.

பெல்​லட் குண்​டு​கள்

கடந்த 20-ம் தேதி டெல்​லி​யில் கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி நாடாளு​மன்​றம் நோக்கி நடத்​திய பேரணி​யில் பெல்​லட் (ரப்பர்) குண்​டு​கள் பயன்​படுத்​தப்​பட்​ட​தாக குற்​றம் சாட்​டப்​பட்டு உள்​ளது.

இதுகுறித்து டெல்​லியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒரு​வர் கூறும்​போது, “நா​டாளு​மன்ற பேரணி​யின்​போது போலீ​ஸார் கண்​ணீர் புகைக்​குண்​டு​களை வீசினர். அந்த கண்​ணீர் புகைக்​குண்​டு​களில் பெல்​லட் குண்​டு​களும் இருந்​தன.

இதில் எனது உடல் முழு​வதும் குண்டு காயங்​கள் ஏற்​பட்​டன. உடல் முழு​வதும் ரத்​தம் வழிந்​தது. மருத்​து​வ​மனை சிகிச்​சை​யின்​போது எனது உடலை துளைத்த பெல்​லட் குண்​டு​கள் அகற்​றப்​பட்​டன” என்று தெரி​வித்​தார்.

​நீட் வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்த காந்தி ஸ்மிருதிக்கு சென்ற இண்டியா கூட்டணி தலைவர்கள்
கோயம்பேடு பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in