

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தினமும் சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான தங்குமிடம், தரிசன வசதி, போக்குவரத்து, அன்னதானம் போன்ற வசதிகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.
ஆயினும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். வரும் அக்டோபர் 3-ம் தேதி, 3-வது புரட்டாசி சனிக்கிழமை என்பதாலும், 2-ம் தேதி காந்தி ஜெயந்தி, 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறைகள் வருவதாலும், அக்டோபர் 1 மற்றும் 5-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் எவ்வித விஐபி சிபாரிசு கடிதங்களும் ஏற்கப்பட மாட்டாது என கூறி, விஐபி பிரேக் தரிசனத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.