

புதுடெல்லி: நீட் தேர்வு அசல் ஓஎம்ஆர் தாளில் குறிப்பிடப்பட்டிருந்த பதில்களுக்கும், தேசிய தேர்வு முகமையால் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஓஎம்ஆர் தாள்களில் உள்ள பதில்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகக்கூறி, நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இப்பிரச்சினைக்கு தீர்வுகாண தேசிய தேர்வுகள் முகமையை பலமுறை அணுகியும் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை, நேரடியாக தேசிய தேர்வுகள் முகமை அலுவலகத்துக்கு சென்ற போதும் நிவாரணம் கிடைக்கவில்லை’ என, மனுவில் மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் முன்பு நேற்று முறையிடப்பட்டது. நீட் கலந்தாய்வு செயல்முறை ஏற்கனவே நடைபெற்று வருவதால் வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கோரி்னர். அ்தை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, மனுவை விசாரணைக்குப் பட்டியலிடுவதாக உறுதியளித்தார்.