திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை

தேபாசிஷ் குமார்

தேபாசிஷ் குமார்

Updated on
1 min read

கொல்கத்தா: கொல்​கத்​தா​வில் திரிண​மூல் காங்​கிரஸ் வேட்​பாளர் உள்​ளிட்ட இரு தலை​வர்​களுக்கு சொந்​த​மான இடங்​களில் நேற்று வரு​மான வரி சோதனை நடை​பெற்​றது.

மேற்கு வங்க சட்​டப்​பேரவை தேர்​தலில் கொல்​கத்​தா​வின் ராஷ்பெஹாரி தொகு​தி​யில் திரிண​மூல் காங்​கிரஸ் சார்​பில் தேபாசிஷ் குமார் போட்​டி​யிடு​கிறார். இந்​நிலை​யில் கொல்​கத்​தா​வில் பத்​மகூர் சாலை​யில் உள்ள இவரது வீடு, மோதிலால் நேரு சாலை​யில் உள்ள இவரது அலு​வல​கத்​தில் நேற்று வரு​மான வரி சோதனை நடை​பெற்​றது. இது​போல் தெற்கு கொல்​கத்​தா​வில் குமார் சாகா என்ற மற்​றொரு தலை​வரின் வீட்​டிலும் சோதனை நடை​பெற்​றது.

இந்த சோதனை​களுக்கு எதி​ராக திரிண​மூல் தொண்​டர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சட்​டப்பேரவை உறுப்​பின​ரான தேபாசிஷ் குமார், கொல்​கத்தா மாநக​ராட்சி செயற்​குழு உறுப்​பின​ராக​வும் உள்​ளார். கடந்த வாரம் நில அபகரிப்பு தொடர்​பான தனிப்​பட்ட வழக்​கில் தேபாசிஷ் குமாரை அமலாக்​கத் துறை 2 முறை விசா​ரித்​தது. மேலும் 7 இடங்​களில் சோதனை நடத்​தி​யது.

வரு​மான வரி சோதனை குறித்து திரிண​மூல் காங்​கிரஸ் செய்​தித் தொடர்​பாளர் ஜெய் பிர​காஷ் மஜும்​தார் கூறுகை​யில், “மேற்கு வங்கத்தில் தேர்​தல் மிக நெருக்​கத்​தில் உள்​ளது. பிரதமர் மோடி​யும் அமித் ஷாவும் அனைத்து மத்​திய அமைப்​பு​கள், தேர்​தல் ஆணை​யம் மற்​றும் மத்​திய படைகளை தங்​களு​டன் அழைத்து வந்​துள்​ளனர். அவர்​களிடம் இல்​லாதது மக்​கள் ஆதரவு மட்​டுமே’’ என்​றார்.

பாஜக தலை​வர் ராகுல் சின்ஹா கூறுகை​யில், “ஒரு சட்​ட​விரோத நில ஒப்​பந்​தத்​தில் தேபாசிஷ் குமார் லஞ்​சம் பெற்​றுள்​ளார். ஒட்​டுமொத்த திரிண​மூல் கட்​சி​யும் ஊழலில் திளைக்​கிறது. ஊழல் தலை​வர்​கள் சிறை​யில் இருக்க வேண்​டும் என்​பதே வங்​காள மக்​களின்​ விருப்​பம்​’’ என்​று தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>தேபாசிஷ் குமார்</p></div>
மறுவரையறையால் ‘பிஓகே’ திரும்ப கிடைக்கும்: பாஜக தலைவர் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in