நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் நடிகர் இம்ரான் கான்

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் நடிகர் இம்ரான் கான்
Updated on: 
1 min read

மும்பை: தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக, அமெரிக்க குடியுரிமை பெற்ற நடிகர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். மேலும், இந்தியாவை விட்டு வெளியேறுமாறு வெளிநாட்டினர் பிராந்தியப் பதிவு அலுவலகம் (எப்ஆர்ஆர்ஓ) இம்ரான்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து, நடிகர் இம்ரான் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற அமர்வு் கேட்டுக் கொண்டதன்பேரில், இம்ரான்கான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். அத்துடன் இனிமேல் இதுபோன்ற போராட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்ற உறுதிமொழியும் அளித்தார். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதேநேரம், நாட்டை விட்டு வெளியேறுவதற்கான நோட்டீஸ் மீதான இடைக்காலத் தடையைத் தொடர்ந்து நீட்டித்தது. வழக்கின் அடுத்த விசாரணை டிச. 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் நடிகர் இம்ரான் கான்
ரூ.400 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி

X