370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதால் காஷ்மீரில் முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்

370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதால் காஷ்மீரில் முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​திய அரசி​யல் சாசனத்​தின் 370-வது பிரிவு ரத்து செய்​யப் பட்​ட​தால் ஜம்மு காஷ்மீர், லடாக்​கில் கல்​வி, சுகா​தார வசதி​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளது என பிரதமர் நரேந்​திர மோடி பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி தனது எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி்வு: ஏழு ஆண்​டு​களுக்கு முன்​பு, இதே நாளில்​தான், இந்​திய அரசி​யல் சாசனத்​தின் 370 மற்​றும் 35(ஏ) ஆகிய பிரிவு​கள் வரலாறாக மாறின. இது ஜம்​மு-​காஷ்மீர் மற்​றும் லடாக் பயணத்​தில் ஒரு தீர்க்​க​மான புதிய அத்​தி​யா​யம்.

அன்​றி​லிருந்​து, ஜம்​மு-​காஷ்மீர் மற்​றும் லடாக் மக்​களின் வாழ்க்கை​யில் பல்​வேறு மாற்​றங்​கள் ஏற்​பட்​டுள்​ளன. உள்​கட்டமைப்பு விரிவடைந்​துள்​ளதுடன், கல்​வி, சுகா​தா​ரம், தொழில் முனை​வோர் மற்​றும் விளை​யாட்டு போன்ற துறை​களில் வாய்ப்புகள் வளர்ச்​சி​யடைந்​துள்​ளன. பெண்​கள், விளிம்​புநிலை சமூகத்​தினர் பல ஆண்​டு​களாகத் தங்​கள் அடிப்​படை அரசியலமைப்பு உரிமை​களை இழந்​திருந்​தவர்​கள், அதி​காரம் பெற்​றுள்​ளனர்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி இன்​னும் கூடு​தல் முக்​கி​யத்​து​வம் பெறுகிறது, ஏனெனில் இந்த ஆண்​டில்​தான் நமது நாடு டாக்​டர் சியாமா பிர​சாத் முகர்​ஜி​யின் 125-வது பிறந்​த​நாளைக் கொண்டாடு​கிறது. தேசிய ஒரு​மைப்​பாட்​டின் மீதான அவரது வாழ்நாள் அர்ப்​பணிப்பு தலை​முறை​களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்​துகிறது. பல தசாப்​தங்​களுக்கு முன்பு அவர் எதை கற்​பனை செய்​தா​ரோ, அது ஆகஸ்ட் 5, 2019 அன்று வரலாற்று ரீதியாக நிறைவேறியது.

ஜம்​மு-​காஷ்மீர் மற்​றும் லடாக்​கில் உள்ள ஒவ்​வொரு குடிமக​னும் தங்​கள் லட்​சி​யங்​களைத் தொடர​வும், வளர்ந்த இந்​தியா என்ற இலக்கை அடைவதற்​குப் பங்​களிக்​க​வும் வாய்ப்​பு​கள் கிடைப்பதை உறுதி செய்​வ​தில் அரசு உறு​தி​யாக உள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதால் காஷ்மீரில் முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்
விபத்தில் மரணமடைந்தால் பத்திரிகையாளர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in