விபத்தில் மரணமடைந்தால் பத்திரிகையாளர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

விபத்தில் மரணமடைந்தால் பத்திரிகையாளர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
Updated on
1 min read

சென்னை: ​விபத்​தில் உயி​ரிழக்​கும் பத்​திரி​கை​யாளர்​களுக்கு நலவாரி​யம் மூல​மாக ரூ.2 லட்​சம் வரை நிவாரணம் வழங்​கு​வதற்கு தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

இதுகுறித்து செய்​தித்​துறை செயலர் வே.​ராஜா​ராமன் வெளி​யிட்ட அரசாணை: பத்​திரி​கை​யாளர் நல வாரியக் குழு​வின் 8, 9-வது கூட்​டங்​களில் பத்​திரி​கை​யாளர்​களின் விபத்து மரண நிவாரணம் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது.

அதன் அடிப்​படை​யில், பத்​திரி​கை​யாளர் நலவாரிய நிதி​யில் இருந்து விபத்​தால் மரணமடை​யும் பத்​திரி​கை​யாளர்​களுக்கு ரூ.2 லட்​சம் நிவாரணம் வழங்​க​வும், இந்​தத் தொகையை முதல்​வரின் பொது நிவாரண நிதி​யில் இருந்து இல்​லாமல், நலவாரிய நிதி​யில் இருந்தே அளிக்​க​வும் அந்​தக் கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இந்​தத் தீர்​மானத்தை கவன​முடன் பரிசீலித்த அரசு, அதையேற்று தற்​போது அதி​காரப்​பூர்​வ​மாக அரசாணையை வெளி​யிட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

விபத்தில் மரணமடைந்தால் பத்திரிகையாளர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்: ரூ.812 கோடியில் ‘அண்ணன் சீர்’ திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in