நீதிபதி சுவாமிநாதன் பதவி நீக்க தீர்மானத்துக்கு எதிராக 36 முன்னாள் நீதிபதிகள் போர்க்கொடி

நீதிபதி சுவாமிநாதன் பதவி நீக்க தீர்மானத்துக்கு எதிராக 36 முன்னாள் நீதிபதிகள் போர்க்கொடி
Updated on
1 min read

புதுடெல்லி: நீ​திபதி சுவாமி​நாதன் பதவிநீக்க தீர்​மானத்​துக்கு எதி​ராக 36 முன்​னாள் நீதிப​தி​கள் போர்க்​கொடி தூக்​கி​யுள்​ளனர்.

மதுரை திருப்​பரங்​குன்​றம் மலை உச்சி தீபத்​துாணில் கார்த்​திகை தீபம் ஏற்ற உத்​தர​விட்​டார் உயர் ​நீ​தி​மன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன். இதையடுத்து அவருக்கு எதி​ராக பதவி நீக்க தீர்​மானம் கொண்​டுவரக் கோரி, திமுக, காங்​கிரஸ் அடங்​கிய ‘இண்​டி​யா' கூட்​டணி கட்​சிகளின் எம்​பிக்​கள் மக்​கள​வைத் தலை​வர் ஓம் பிர்​லா​விடம் நோட்​டீஸ் அளித்​துள்​ளனர்.

இந்​நிலை​யில் இதற்கு எதி​ராக 36 முன்​னாள் நீதிப​தி​கள் போர்க்​கொடி தூக்​கி​யுள்​ளனர். இதுதொடர்​பாக உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி கிருஷ்ணன் முராரி ஜே. உள்​ளிட்ட 36 முன்​னாள் நீதிப​தி​கள் கூட்​டறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளனர். அதில் அவர்​கள் கூறி​யிருப்​ப​தாவது:

சில நாடாளு​மன்ற உறுப்​பினர்​களால் முன்​னெடுக்​கப்​பட்​டு, சில மூத்த வழக்​கறிஞர்​களால் ஆதரிக்​கப்​படும் இந்த நடவடிக்கை சரியல்ல. ஒரு குறிப்​பிட்ட தரப்​பினரின் சித்​தாந்த மற்​றும் அரசி​யல் எதிர்​பார்ப்​பு​களு​டன் ஒரு நீதிப​தி​யின் நீதித் துறை உத்​தர​வு​கள் ஒத்​துப்​போக​வில்லை என்​ப​தற்​காக, பதவி​யில் இருக்​கும் ஒரு நீதிப​தியை மிரட்​டிப் பணிய வைப்​ப​தற்​கான ஒரு வெட்​கமற்ற முயற்​சி​தான் இது.

நீதித்​துறை​யின் தீர்ப்பை குறி​வைத்​து, பதவி நீக்க நடை​முறையை ஒரு கரு​வி​யாக பயன்​படுத்​தி, நீதிப​தியை நீக்க முயற்​சிக்​கப்​படு​கிறது. இது நீதித்​துறை​யின் சுதந்​திரத்தை சீர்​குலைப்​பது மற்​றும் நீதித்​துறை மத்​தி​யில் அச்​சத்தை உரு​வாக்​கு​வதை நோக்​க​மாகக் கொண்​டது.

எம்​பிக்​களின் அழுத்​தத்​துக்கு பணிந்​தால் நீதித் துறை​யின் சுதந்​திர​மும் கண்​ணி​ய​மும் அழிக்​கப்​பட்​டு​விடும். நீதித் துறை இதை ஒரு​போதும் அனு​ம​திக்​கக் கூடாது. எனவே, சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தின் மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமி​நாதனைப் பதவியி​லிருந்து நீக்​கு​வதற்​கான கண்​டனத் தீர்​மானத்தை ஏற்​கக் கூடாது. இவ்​வாறு அதில்​ கூறப்பட்டுள்ளது.

நீதிபதி சுவாமிநாதன் பதவி நீக்க தீர்மானத்துக்கு எதிராக 36 முன்னாள் நீதிபதிகள் போர்க்கொடி
டெல்லியில் கடும் பனிமூட்டம்: 129 விமானங்கள் ரத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in