டெல்லியில் கடும் பனிமூட்டம்: 129 விமானங்கள் ரத்து

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 129 விமானங்கள் ரத்து
Updated on
1 min read

புதுடெல்லி: கடும் பனிமூட்​டம் காரண​மாக நாடு முழுவதும் விமான சேவை​கள் பாதிக்​கப்​பட்​டு உள்​ளன.

இந்​நிலை​யில் டெல்லி இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் நேற்று 66 விமானங்​களின் வரு​கை​யும், 63 விமானங்​களின் புறப்​பாடும் ரத்து செய்​யப்​பட்​ட​தாக அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​தார்.

எனினும் நேற்று மதி​யம் நிலைமை சீராகி அனைத்து விமானங்​களும் வழக்​கம்​போல் இயங்​கத் தொடங்​கிய​தாக​வும் பயணி​கள் தங்​கள் விமான நிறு​வனங்​களை அணுகி விவரத்தை அறிய​லாம் எனவும் டெல்லி விமான நிலை​யத்தை நிர்​வகிக்​கும் டயல் நிறு​வனம் தெரி​வித்​தது.

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 129 விமானங்கள் ரத்து
நேஷனல் ஹெரால்டு வழக்கு: நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in