

கோப்புப்படம்
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் 3 வாரங்களுக்கு முன்பாக சட்டவிரோத ஆயுதங்கள் சப்ளை செய்தவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
அவர்களிடமிருந்து கிடைத்தத் தகவலைத் தொடர்ந்து நேற்று மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மவட்டம் உமர்தி கிராமத்தில் நேற்று போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோத ஆயுதத் தொழிற்சாலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 36 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர் என்று புனே மாவட்ட போலீஸ் இணை ஆணையர் ரஞ்சன் குமார் சர்மா தெரிவித்தார்.