

திருவனந்தபுரம்: கேரள தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் யு கேல்கர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (பிஎல்ஓ) இலக்குகள் தருவது அவர்களுக்கு அழுத்தம் தரவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. மாறாக எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்பதே ஆகும். பிஎல்ஓ.க்களுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன்னடம் மற்றும் தமிழ் அதிகமாகப் பேசப்படும் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு எல்லையை ஒட்டிய பகுதிகளில் பிஎல்ஓ.க்களுடன் அம்மொழிகளில் திறன் பெற்றவர்களும் செல்கின்றனர். கணக்கெடுப்பு படிவங்களில் இதுவரை 70 சதவீதம் நிரப்பப்பட்டு பெறப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.