மாணவர் தற்கொலை விவகாரத்தில் ஐஐடி டீன் பணியிடை நீக்கம்: சாதி பாகுபாடு என குற்றச்சாட்டு

மாணவர் தற்கொலை விவகாரத்தில் ஐஐடி டீன் பணியிடை நீக்கம்: சாதி பாகுபாடு என குற்றச்சாட்டு
Updated on
1 min read

மும்பை: ஐஐடி மும்பை மாணவர் தற்​கொலை விவ​காரத்​தில் நிர்வாக விவ​காரங்​களுக்​கான டீன் பணி​யிடை நீக்​கம் செய்யப்பட்டுள்​ளார்.

ஐஐடி மும்பை நிறு​வனத்​தில் இரண்​டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வகோடே (20), கடந்த வெள்​ளிக்​கிழமை நடை​பெற்ற இடைப்​பரு​வத் தேர்​வின்​போது கைப்​பேசி​யைப் பயன்​படுத்தி ஏஐ தளம் மூலம் விடை தேட முயன்​ற​தாகக் குற்​றம் சாட்​டப்​பட்​டார்.

தேர்​வறைக்​குப் பொறுப்​பாள​ராக இருந்த பேராசிரியரும் நிர்​வாக விவ​காரங்​களுக்​கான டீனு​மான சூர்​ய​நா​ராயண துல்லா அவரை கண்​டித்​த​தாகக் கூறப்​படு​கிறது. தேர்வு முடிந்த சில மணி நேரங்களி​லேயே வகோடே தனது விடுதி அறை​யில் தற்​கொலை செய்து கொண்​டார்.

மாணவரின் தற்​கொலைக்கு சாதி பாகு​பாடு காரணம் என்று அவரது பெற்​றோர் குற்​றம்​சாட்​டினர். பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலி​யுறுத்​தி​ மாணவர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதையடுத்து, நேற்று டீன் பதவியி​லிருந்து சூர்​ய​ நாராயண துல்லா பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார். இருப்பினும், அவர் தொடர்ந்து பேராசிரிய​ராகத் தொடர்​வ​தால், அவரைப் பணி​யில் இருந்து முழு​மை​யாக நீக்​கக் கோரி மாணவர்கள் தொடர்​ போ​ராட்​டத்​தில்​ ஈடு​பட்​டு வருகின்​றனர்​.

மாணவர் தற்கொலை விவகாரத்தில் ஐஐடி டீன் பணியிடை நீக்கம்: சாதி பாகுபாடு என குற்றச்சாட்டு
‘ஜெம்’ வீரமணி வழக்கில் நீளும் தொடர்புகள் முதல் வீடியோ ஆதாரங்கள் வரை - திடுக்​கிடும் பின்னணி தகவல்​கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in