“மேற்கு வங்கத்தில் திரிணமூல் வென்றால் மோடி பதவி விலக தயாரா?” - டெரிக் ஓ பிரையன் சவால்

திரிணமுல் எம்.பி டெரிக் ஓ பிரையன்

திரிணமுல் எம்.பி டெரிக் ஓ பிரையன்

Updated on
1 min read

கொல்கத்தா: “மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றினால் பிரதமர் பதவியில் இருந்து விலக தயாரா?” என பிரதமர் நரேந்திர மோடிக்கு திரிணமுல் எம்.பி டெரிக் ஓ பிரையன் சவால் விடுத்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 294 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டுள்ளது மேற்கு வங்க மாநிலம். இதில் முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இன்று (ஏப்.29) 142 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த கால வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், சமூக வலைதள பதிவு மூலம் பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார். “நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளிலும் நீங்கள்தான் வேட்பாளர் என அறிவித்தீர்கள். அந்த பேச்சை கைவிடுத்து இந்த சவாலை நீங்கள் ஏற்பீர்களா.

மே 4-ம் தேதி அன்று மம்தா பானர்ஜியும், திரிணமுல் காங்கிரஸும் வெற்றி பெறும் போது, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யுங்கள். அதற்கான தைரியம் உங்களிடம் உள்ளதா?” என அதில் கூறியுள்ளார்.

கடந்த 2011, 2016 மற்றும் 2021 என தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த தேர்தலில் திரிணமுல் 215 இடங்களில் வென்றது. பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையில்தான் இந்த தேர்தலிலும் தீவிர போட்டி நிலவுவதாக தகவல்.

<div class="paragraphs"><p>திரிணமுல் எம்.பி டெரிக் ஓ பிரையன்</p></div>
ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக குறைந்த ரன்களில் ஆல் அவுட்டான 5 அணிகள்: முதலிடத்தில் ஆர்சிபி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in