“வங்கதேச இந்துக்கள் போராட முடிவு செய்தால் உலகளவில் ஆதரவு கிட்டும்” - மோகன் பாகவத்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

Updated on
1 min read

மும்பை: வங்கதேசத்தின் 1.25 கோடி இந்து மக்கள் தங்கள் உரிமைக்காக போராட முடிவு செய்தால் அவர்களுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள இந்துக்கள் நிச்சயம் உதவுவார்கள் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அடுத்தடுத்து தொழிலதிபர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என பலர் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த நாடு முழுவதும் இந்த போக்கு நீடிக்கிறது. இந்த சூழலில் வங்கதேசத்தில் நெருக்கடி நிலையில் இந்துக்கள் குறித்து மும்பையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்வில் அதன் தலைவர் மோகன் பாகவத் கூறியதாவது:

“வங்கதேசத்தில் சுமார் 1.25 கோடி இந்துக்கள் உள்ளனர். அவர்கள் அங்கு இருக்கவும், தங்கள் உரிமைக்காக போராடவும் முடிவு செய்தால் உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் அவர்களுக்கு உதவுவார்கள்.

இந்திய நாட்டில் மக்கள் தொகை சார்ந்த விவகாரத்தில் அரசு இப்போது கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக சட்டவிரோத குடியேற்றத்தில் அரசு மேற்கொண்டு வரும் முயற்சி வெற்றி பெறும். இந்தியா பலம் வாய்ந்தது. ஆர்எஸ்எஸ் நிதி குறித்து அறிய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாங்கள் எங்கள் உறுப்பினர்களிடம் இருந்து நிதி பெறுகிறோம். நாங்கள் விடுதிகளில் தங்குவதில்லை, ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களின் வீடுகளில் தங்குகிறோம்.

எந்த சமூகத்தை சேர்ந்தவரும் ஆர்எஸ்எஸ் தலைவர் ஆகலாம். நாங்கள் அனைத்து சமூக மக்களுக்காகவும் பணியாற்றி வருகிறோம். சமூகத்தை ஒன்றிணைப்பதுதான் எங்கள் நோக்கம்” என அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்</p></div>
India-US Trade Deal: தேசிய அளவில் போராட்டத்துக்கு சம்யுக்த் கிசான் மோர்ச்சா அழைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in