“3 முக்​கிய ஊழல்​களை அம்பலப்படுத்​துவேன்​” - கேஜ்ரிவாலுக்​கு சுகேஷ் சந்திரசேகர்​ மிரட்​டல் ​

“3 முக்​கிய ஊழல்​களை அம்பலப்படுத்​துவேன்​” - கேஜ்ரிவாலுக்​கு சுகேஷ் சந்திரசேகர்​ மிரட்​டல் ​
Updated on
1 min read

புதுடெல்​லி: மோசடி மன்​னன்​ சுகேஷ் சந்திரசேகர் பணமோசடி உள்​ளிட்​ட பல்​வேறு வழக்​குகளில்​ கைது செய்​யட்​டு, டெல்​லி திகார்​ சிறையில்​ அடைக்​கப்​பட்​டுள்​ளார்.

இந்நிலையில் அவர் டெல்​லி முன்​னாள்​ முதல்​வரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான​ அர்விந்த் கேஜ்ரிவால்​ மற்​றும்​ முன்​னாள்​ அமைச்​சர்​ சத்​யேந்​தர்​ ஜெயினுக்​கு எழுதியுள்​ள கடிதத்தில்​ குறிப்​பிட்​டுள்​ள​தாவது: மது​பானக்​ ​கொள்​கை வழக்கைத்​ தொடர்​ந்​து, ‘ஜல்​ போர்​டு’ ​விவ​காரம்​ வந்​துள்​ளது.

அடுத்​து, 3 முக்​கியத்​ துறைகளில்​ நீங்​கள்​ செய்​த ஊழல்கள்​ அம்பலப்​படுத்​தப்​படும்​. டெல்​லியில்​ நடந்​ததைப்​ போலவே, பஞ்சாப்​ மக்​களும்​ உங்​கள்​ ஆணவத்​துக்​கும்​, ஊழல்​ கட்​சிக்​கும்​ எதி​ராக இன்​னும்​ கடுமை​யாக எதிர்​​வினை​யாற்​று​வார்​கள்​.

நீங்​களும்​, உங்​கள்​ பி​னாமி நிறுவனர்​களும்​ கடந்​த 2015, 2016-ம்​ ஆண்​டுகளில்​ என்​னுடன்​ வைத்​திருந்​த தொடர்​பை நினை​வில்​ வைத்​திருப்​பீர்​கள்​ என நம்​புகிறேன்​. உங்​களுக்​கு சில ​விஷயங்​கள்​ மறந்​திருக்​கலாம்​. ஆ​னால்​, எனக்​கு அனைத்​தும்​ நினை​வில்​ உள்ளன. ​விரை​வில்​ உங்​களை ஆச்​சரியப்​படுத்​துவேன்​. இவ்​வாறு அதில்​ குறிப்பிட்டுள்ளார்.

“3 முக்​கிய ஊழல்​களை அம்பலப்படுத்​துவேன்​” - கேஜ்ரிவாலுக்​கு சுகேஷ் சந்திரசேகர்​ மிரட்​டல் ​
வங்கதேச அதிபர் தேர்தலில் மிர்சா ஃபக்​ருல் இஸ்​லாம் ஆலம்​கீர் வெற்றி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in