உ.பி. வரைவு பட்டியலில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உ.பி. வரைவு பட்டியலில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
Updated on
1 min read

லக்னோ: உத்தர பிரதேசத்​தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு வரைவு வாக்​காளர் பட்​டியல் நேற்று வெளி​யிடப்​பட்​டது. முன்​ன​தாக அந்த பட்​டியலில் 15.44 கோடி வாக்​காளர்​கள் இருந்த நிலை​யில் தற்​போது 12.55 கோடி வாக்​காளர்​கள் இடம்​பெற்​றுள்​ளனர். இதன் மூலம் 2.89 கோடி வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ள​னர்.

இதுகுறித்து மாநில தலைமை தேர்​தல் அதி​காரி நவதீப் ரின்வா கூறும்போது, ”வரைவு வாக்​காளர் பட்​டியலில் இறப்​பு, நிரந்தர இடம்​பெயர்​வு, பலமுறை பதிவு செய்​தல் போன்ற காரணங்​களால் 2 கோடிக்​கும் அதி​க​மான வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர். இது, மொத்த வாக்​காளர் எண்​ணிக்​கை​யில் 18.7% ஆகும்” என்​றார்.

உ.பி. வரைவு பட்டியலில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கரூர் நெரிசலில் 41 பேர் இறந்த வழக்கு: தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in