சமூக வலைதளங்களில் வரும் ஐபிஎல் விளம்பரத்தை நம்பாதீர்: ஹைதராபாத் காவல் ஆணையர் எச்சரிக்கை

ஹைத​ரா​பாத்​ நகர காவல் ஆணை​யர் சஜ்ஜ​னார்

ஹைத​ரா​பாத்​ நகர காவல் ஆணை​யர் சஜ்ஜ​னார்

Updated on
1 min read

ஹைதராபாத்: தற்​போது ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகள் நடை​பெற்று வரும் வேளை​யில், பல இடங்​களில் கிரிக்​கெட் சூதாட்டங்களும் இலைமறை காயாக நடை​பெறுகின்றன என்​பது மறுக்க முடி​யாத உண்​மை. இதில் குறிப்​பாக ஹைத​ரா​பாத்​தில் பல சூதாட்​டக்​காரர்​களை போலீ​ஸார் கைது செய்து வருகின்றனர்.

நேற்று ஹைத​ரா​பாத்​தில் நகர காவல் ஆணை​யர் சஜ்ஜ​னார் செய்​தி​யாளர்​களிடம் இது தொடர்​பாக கூறியதாவது: ஐபிஎல் கிரிக்கெட்டை சிலர் மூலதன​மாக்கி கோடி கணக்​கில் குறுக்கு வழி​யில் சம்​பா​தித்து வரு​கின்​றனர். கிரிக்​கெட் மீதுள்ள மோகத்தால் சாமானிய மக்​கள் இதில் ஏமாற்​றப்​பட்டு வருகின்றனர். குறிப்​பாக சமூக வலைத்​தளங்​கள் மூலம் வரும் போலி விளம்​பரங்​களை நம்பி ஏமாற வேண்​டாம்.

‘டாஸ் ஜெயிப்​பது யார் ? இந்த போட்​டி​யில் யார் வெற்றி பெறுவார்கள் ? எந்த அணி எத்​தனை ரன் குவிக்​கும் ? என சரமாரியாக கேள்வி​களால் மக்​களை முதலில் ஈர்க்​கிறார்​கள். அதன் பின்​னர் ‘பெட்​டிங்’ மூலம் பணத்தை மக்​களிடம் இருந்து கறந்து விடுகின்றனர். ஆதலால் யாரும் ஐபிஎல் கிரிக்​கெட் தொடர்​பான சமூக வலைதள விளம்​பரங்​களை நம்பி ஏமாற வேண்​டாம். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>ஹைத​ரா​பாத்​ நகர காவல் ஆணை​யர் சஜ்ஜ​னார்</p></div>
ஆயிரம் விளக்கு தொகுதியில் அசத்தப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in