நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்ட ஹோலி

வண்ணம், சேறு பூசியும் உடைகளை கிழித்து விளையாடியும் உற்சாகம்
நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்ட ஹோலி
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தியா முழு​வ​தி​லும் நேற்று ஹோலி பண்​டிகை விமரிசை​யாகக் கொண்​டாடப்​பட்​டது.

வண்​ணம் பூசுதல், சேற்றை இறைத்​தல், உடைகளை கிழித்து விளை​யாடு​தல் என பல்​வேறு வகை​யில் மக்​கள் ஹோலியை கொண்​டாடி மகிழ்ந்​தனர். புராண வரலாற்​றின் அடிப்​படை​யில் ஹோலி பண்​டிகை நாளில் ‘ஹோலிகா தெஹன்‘ எனும் பெயரில் ஒரு சடங்கு நடத்​தப்​படு​கிறது. இதற்​காக, 10 நாட்​கள் முன்​பாக ஒவ்வொரு நகரம் அல்​லது கிராமங்​களின் முக்​கிய சந்​திப்​பு​களில் காய்ந்த மரக்​கிளை​களை கொண்​டு​வந்து குவிக்​கின்​றனர்.

இதற்கு நாள்​தோறும் அப்​பகுதி பெண்​கள் பூஜை செய்​கின்​றனர். ஹோலிப் பண்​டிகை நாள் அதி​காலை​யில் பூஜை செய்த பின் அந்த விறகு​களை எரிக்​கின்​றனர். தீ கொழுந்து விட்டு எரி​யும்​போது மகிழ்ச்சி பொங்க ஆர்ப்​பரிப்​பதுடன், அந்த தீயை தங்​கள் வீட்​டுக்கு எடுத்​து ​வந்து புதி​தாக அடுப்பை மூட்​டு​வார்​கள். இந்த சடங்​குடன் ஹோலி பண்​டிகை நேற்று தொடங்​கியது.

மக்​கள் ஒரு​வர் மீது ஒரு​வர் வண்​ணப் பொடிகளை பூசி​யும், வண்ண நீரை பீய்ச்சி அடித்​தும், தில​கமிட்​டும் மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தினர். மேலும் இனிப்​பு​களை பரி​மாறிக் கொண்டனர். உ.பி.​யில் கிருஷ்ண ஜென்ம பூமி​யாக கருதப்​படும் மது​ரா​வில் ஹோலி பண்​டிகை பிரசித்தி பெற்​றது. அங்கு சுமார் 10 நாட்​கள் முன்​பாகவே ஹோலி தொடங்கி விடு​கிறது.

பிருந்​தாவனின் புகழ்​பெற்ற ’பாங்கே பிஹாரி’ கிருஷ்ணன் கோயிலில் பலவண்ண செயற்கை மழை​யுடன் கொண்டாடப்படும் ஹோலி உலகப் புகழ் பெற்​றது. உ.பி., பிஹார், ம.பி. உள்​ளிட்ட வடமாநிலங்​களில் சற்று வித்​தி​யாச​மாக​வும் ஹோலி கொண்டாடப்பட்​டது.

மது​ரா​வின் பர்​ஸானா பகு​தி​யில் ஆண்​களைப் பெண்​கள் தடி​யால் அடித்​துக் கொண்​டாடும் ஹோலி மிக​வும் ரசிப்​ப​தாக இருந்​தது. மது​ரா​வில் நவுஹீல், சுரிர் ஆகிய இடங்​களை சுற்​றி​யுள்ள கிராமங்களில் வண்​ணங்​களின் ஹோலிக்கு மறு​நாள் சேற்று மண் வீசி ஹோலியை கொண்​டாடு​கின்​றனர். இந்த உற்​சாகம் இன்று நண்​பகல் வரை தொடரும். இந்​த வகை ஹோலி, மது​ரா​வில் பல ஆண்​டு​களாகத் தொடர்​கிறது.

இதே​போல், ஹோலிக்கு மறு​தினம் ஆண்​கள் ஒரு​வருக்கு ஒரு​வர் குர்​தா, பைஜா​மாவை கிழித்​துக் கொண்டு விளை​யாடு​கின்​றனர். உ.பி., பிஹாரின் சில பகு​தி​களில் மட்​டுமே இவ்​வாறு கொண்டாடப்​படுகிறது.

நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்ட ஹோலி
ரூ.13.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: பெங்களூருவில் 3 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in