இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டது, பெண்கள் குறிவைக்கப்பட்டனர்: டிசிஎஸ் நாசிக் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மகளிர் ஆணையம் கருத்து

இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டது, பெண்கள் குறிவைக்கப்பட்டனர்: டிசிஎஸ் நாசிக் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மகளிர் ஆணையம் கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: மகா​ராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் கிளை​யில் பணிபுரி​யும் ஊழியர்​களுக்கு பாலியல் துன்​புறுத்​தல் கொடுத்​த​தாக புகார் எழுந்​துள்​ளது. இது தொடர்​பாக சிலர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதனிடையே, இந்த விவ​காரம் தொடர்​பாக தேசிய மகளிர் ஆணையம் (என்​சிடபிள்​யு) விசா​ரித்து வரு​கிறது.

இந்​நிலை​யில், என்​சிடபிள்யு நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பணி​யிடத்​தில் பரவலான பாலியல் துன்​புறுத்​தல் மற்​றும் அதி​கார துஷ்பிரயோகம் நிறைந்த ஆழ்ந்த கவலை​யளிக்​கக்​கூடிய, நச்​சுத்​தன்மை வாய்ந்த சூழல் நில​வு​கிறது. குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் நாசிக் டிசிஎஸ் கிளை​யின் முழுக் கட்​டுப்​பாட்​டை​யும் தங்​கள் வசம் வைத்​திருந்​தனர். அவர்​கள் இளம் பெண்​களைக் குறி​வைத்​து, அவர்​களை பாலியல் ரீதி​யாக​வும், உணர்ச்சி ரீதி​யாக​வும், மன ரீதி​யாக​வும் துன்​புறுத்தி உள்​ளனர்.

குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் இந்து மத நம்​பிக்​கைகளைத் தரக்​குறை​வாகப் பேசி​யும், பெண்​களை மிரட்​டி​யும் துன்​புறுத்​தி​யுள்​ளனர். பெண் ஊழியர்​களை நோக்​கித் தொடர்ந்து மதம் சார்ந்த எதிர்​மறை​யான கருத்​துக்​களைக் கூறி ஒரு கட்​டாய​மான சூழலை உரு​வாக்​கி​யுள்​ளனர். குறிப்​பாக இளம் ஊழியர்​கள் இத்​தகைய மத எதிர்ப்​புப் பேச்​சுகளால் எளி​தில் பாதிக்​கப்​படு​கின்​றனர் என்று பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் குறிப்​பிட்​டுள்​ளனர்.

மேலும், அங்கு சிசிடிவி கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டிருந்​தா​லும், அவை செயல்​பட​வில்​லை. நாசிக் கிளை​யில் பாலியல் வன்​கொடுமை தடுப்பு (பிஓஎஸ்​எச்) நடை​முறை​கள் செயலற்று இருந்​துள்​ளன. நிறு​வனத்​தின் இந்​தச் செயலற்ற தன்மை என்​பது வெறும் வி​தி​மீறல் மட்​டுமல்ல, நிர்​வாகக் குறை​பாடும் ஆகும். இவ்வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டது, பெண்கள் குறிவைக்கப்பட்டனர்: டிசிஎஸ் நாசிக் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மகளிர் ஆணையம் கருத்து
எரிபொருள் பயன்பாட்டை குறைக்க ஒன்றிணைவோம்: மக்களுக்கு மத்திய அரசு அழைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in