2070-ல் இந்துக்கள் மக்கள் தொகை குறையும்: சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்

2070-ல் இந்துக்கள் மக்கள் தொகை குறையும்: சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்
Updated on: 
1 min read

புதுடெல்லி: வரும் 2070-ம் ஆண்டில் இந்தியாவில் இந்துக்கள் மக்கள் தொகை தற்​போதைய 79.4 சதவீதத்​தில் இருந்து 75.8 சதவீதமாக குறையும் என்று சர்​வ​தேச ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்கப்​பட்டு உள்​ளது.

“உல​கில் உள்ள மதங்கள் எதிர்​காலம்” என்ற தலைப்​பில் அமெரிக்காவை சேர்ந்த பியூ ஆராய்ச்சி மையம் அண்மையில் விரிவான ஆய்​வறிக்​கையை வெளி​யிட்டு உள்​ளது. அதில் கூறியிருப்​ப​தாவது:

உலக மக்​கள் தொகை​யில் கிறிஸ்தவர்கள் எண்​ணிக்கை 227 கோடியாக உள்​ளது. முஸ்​லிம்கள் மக்​கள் தொகை 202 கோடி. 2035-ல் முஸ்​லிம்கள் எண்​ணிக்கை 257 கோடியாக அதி​கரிக்​கும்.

கிறிஸ்தவர்கள் எண்​ணிக்கை 252 கோடி​யாக இருக்​கும். இதன்​மூலம் 2035-ல் உல​கின் மிகப் ​பெரிய மத​மாக, முஸ்​லிம் மதம் உரு​வெடுக்​கும். கிறிஸ்தவம் 2-வது இடத்​துக்கு தள்​ளப்​படும். 2070-ல் முஸ்​லிம்கள் மக்​கள்தொகை 360 கோடி​யாக உயரும். கிறிஸ்தவர்கள் மக்​கள்தொகை 300 கோடிக்​கும் கீழாகவே இருக்கும்.

2020-ம் ஆண்டு நில​வரப்​படி இந்​தி​யாவில் இந்​துக்கள் மக்​கள் தொகை 79.4 சதவீத​மாக உள்​ளது. வரும் 2070-ம் ஆண்​டில் இந்துக்கள் மக்​கள் தொகை 75.8 சதவீத​மாகக் குறையும். இதே கால​கட்​டத்​தில் முஸ்​லிம்கள் மக்​கள் தொகை 15.2 சதவீதத்​தில் இருந்து 19.6 சதவீத​மாக அதி​கரிக்​கும்.

இந்​தி​யாவில் வசிக்​கும் கிறிஸ்தவர்கள் எண்​ணிக்கை தற்​போது 2.2 சதவீத​மாக உள்​ளது. வரும் 2070-ம் ஆண்​டிலும் கிறிஸ்தவர்கள் மக்​கள் தொகை 2.2 சதவீத​மாகவே நீடிக்​கும்.

அமெரிக்​கா​வில் தற்போது 40 லட்​சம் இந்​துக்​கள் வசிக்​கின்​றனர். வரும் 2070-ம் ஆண்​டில் இந்த எண்​ணிக்கை 90 லட்​ச​மாக அதி​கரிக்​கும்.

தற்​போது உல​கிலேயே அதிக முஸ்​லிம்​கள் வசிக்​கும் நாடாக இந்தோனேசியா முதலிடத்​தில் உள்​ளது. வரும் 2070-ம் ஆண்​டில் இந்தோனேசி​யாவை பின்​னுக்​குத் தள்ளி பாகிஸ்​தான் முதலிடம் பிடிக்கும்.

மேலும் சர்​வ​தேச அளவில் அதிக முஸ்​லிம்​கள் வசிக்​கும் நாடுகள் பட்​டியலில் இந்​தியா 2-வது இடத்​துக்கு வரும்.

சீன மக்​கள் தொகையில் சுமார் 90 சதவீதம் பேர் எந்த மதத்​தையும் சேர்ந்தவர்கள் கிடை​யாது என்று வகைப்​படுத்​தப்​படு​கின்​றனர்.

உல​கம் முழு​வதும் 200 கோடி பேர் எந்த மதத்​தையும் சேர்ந்தவர்கள் கிடை​யாது என்று கூறுகின்​றனர். உலக மக்​கள் தொகை​யில் இவர்கள் எண்​ணிக்கை 24 சதவீத​மாக உள்​ளது. வரும் 2070-ம் ஆண்​டில் இவர்கள் எண்​ணிக்கை 17 சதவீத​மாக மட்டுமே இருக்​கும். இவ்​வாறு ஆய்​வறிக்​கை​யில் தெரி​விக்​கப்​பட்டு உள்​ளது.

2070-ல் இந்துக்கள் மக்கள் தொகை குறையும்: சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்
உத்தர பிரதேச வக்பு வாரியங்களில் புதிய மாற்றங்கள்: நிர்வாகிகள் பதவிக்கு உயர் கல்வி அவசியம்

X