நீட் போராட்​டத்​தில் காவல்​ துறை அத்துமீறல் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையில் உயர்மட்ட குழு

நீட் போராட்​டத்​தில் காவல்​ துறை அத்துமீறல் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையில் உயர்மட்ட குழு
Updated on
1 min read

புதுடெல்லி: நீட் ​வி​னாத்​தாள் கசிவுக்கு எதி​ரான மாணவர்​களின் போராட்​டத்​தின் போது நடை​பெற்ற காவல்​துறை அத்​து​மீறல்​கள் குறித்து விசா​ரணை நடத்த உச்ச நீதி​மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சுபாஷ் ரெட்டி தலை​மை​யில் உயர்​மட்ட குழுவை அமைத்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பான மாணவர்​கள் போராட்​டத்​தின் ​போது காவல்​துறை​யினரின் அடக்​கு​முறை, வரம்பு மீறிய செயல்​கள், பெண் போராட்​டக்​காரர்​கள் மீதான பாலியல் துன்​புறுத்​தல், காவலர்​கள் மீதான தாக்​குதல், மாணவர்​கள் மீதான வழக்​கு​களை ரத்து செய்​வது உள்​ளிட்ட விவ​காரங்​கள் அடங்​கிய பல மனுக்​கள் உச்​சநீ​தி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்​தன.

இந்த மனுக்​களை உச்​சநீ​தி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிப​தி​கள் ஜாய் மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 18ம் தேதி விசா​ரித்​தது. அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட பின்​னர் உத்​தரவு பிறப்​பித்த நீதிப​தி​கள், “நீட் போராட்​டம் தொடர்​பாக எழுந்​துள்ள அனைத்து வித​மான பிரச்​சனை​களை​யும் ஆராய ஒரு உயர்​மட்ட குழு அமைக்​கப்​படும்” என்​றனர்.

அதன்​படி, ஓய்வு பெற்ற உச்ச நீதி​மன்ற நீதிபதி சுபாஷ் ரெட்டி தலை​மை​யில், அரி​யானா உயர்​நீ​தி​மன்ற முன்​னாள் நீதிபதி ரவிசங்​கர் ஜா, டெல்லி உயர்​நீ​தி மன்ற முன்​னாள் நீதிபதி சைலேந்தர் கவுர், சி.பி.ஐ முன்​னாள் இயக்​குனர் ரிஷி குமார் சுக்லா, மேகாலயா மாநில முன்​னாள் டி.ஜி.பி எல்​.ஆர்​.பிஷ்னோய் ஆகியோர் கொண்ட உயர்​மட்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இந்த உயர்​மட்ட குழு​வானது, நீட் போராட்​டத்​தின்​போது காவல்​துறை​யால் பயன்​படுத்​தப்​பட்ட அதீத பலப் பிரயோகம், பெண்களுக்கு எதி​ரான பாலியல் துன்​புறுத்​தல், பாலியல் சீண்​டல் மற்​றும் இணை​ய​வழித் துன்​புறுத்​தல் தொடர்​பான குற்​றச்​சாட்​டு​கள் குறித்​தும், காவல்​துறை​யினர் மீதான தாக்​குதல்​கள் உள்ளிட்டவை குறித்​தும் விசா​ரணை நடத்​தி, இழப்​பீடு தொடர்பாக​வும் பரிந்​துரைக்​க​வுள்​ளது.

இந்த உயர் மட்ட குழு அளிக்​கும் அறிக்​கை​யின் அடிப்​படை​யில் அடுத்த கட்ட சட்​டரீ​தி​யான நடவடிக்​கைகள்​ எடுக்​கப்​படும்​ என்​று உச்​ச நீதி​மன்​றம்​ ஏற்​க​னவே தெளிவுபடுத்​தி இருந்​தது குறிப்பிடத்தக்​கது.

நீட் போராட்​டத்​தில் காவல்​ துறை அத்துமீறல் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையில் உயர்மட்ட குழு
லடாக்கில் உயர் நீதிமன்ற கிளை: அமித் ஷா தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in