லடாக்கில் உயர் நீதிமன்ற கிளை: அமித் ஷா தகவல்

லடாக்கில் உயர் நீதிமன்ற கிளை: அமித் ஷா தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், லடாக் உயர் நீதி​மன்​றம் கோடை காலத்​தில் ஸ்ரீநகரிலும், குளிர் காலத்​தில் ஜம்​மு​விலும் செயல்படுகிறது. லடாக் யூனியன் பிரதேச பகு​தி​யைச் சேர்ந்த மக்கள், உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர ஸ்ரீநகர் அல்​லது ஜம்முக்கு அலைய வேண்​டிய சூழல் நில​வு​கிறது.

இந்​நிலை​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், ``லடாக்கில் உயர் நீதி​மன்ற கிளையை அமைக்க பிரதமர் மோடி தலை​மையி​லான மத்திய அமைச்​சரவை முடிவு செய்​துள்​ளது.

இதன்​மூலம் லடாக்​கின் குக்​கி​ராமங்​களைச் சேர்ந்த மக்​கள் பலன் அடை​வார்​கள். லடாக்​கின் வளர்ச்​சி​யில் மத்​திய அரசு அதிக அக்​கறை செலுத்துகிறது'' எனக் கூறியுள்​ளார்.

லடாக்கில் உயர் நீதிமன்ற கிளை: அமித் ஷா தகவல்
4 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: கிறிஸ்தவ மத போதகருக்கு 4 தூக்கு தண்டனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in