தேசிய செவிலியர் ஆணையத்தை 2 மாதத்தில் அமைக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தேசிய செவிலியர் ஆணையத்தை 2 மாதத்தில் அமைக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​திய தொழில்​முறை செவிலியர் சங்​கம் சார்​பில் டெல்லி உயர் நீதிமன்றத்​தில் மனு ஒன்று தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: 2023-ம் ஆண்டு நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்ட ‘தேசிய செவிலியர் மற்​றும் மகப்​பேறு மருத்துவப் பணி ஆணை​யச் சட்​டம்’ மத்​திய அரசால் 2024 பிப்​ர​வரி 29 அன்று நடை​முறைக்கு கொண்​டு​வரப்​பட்​டது.

இதன்​படி, இந்​தி​யா​வில் செவிலியர் மற்​றும் மகப்​பேறு மருத்​து​வக் கல்​வி, பயிற்சி நடை​முறை​களை ஒழுங்​குபடுத்த ‘இந்​திய செவிலியர் கவுன்​சிலுக்​கு’ பதிலாக ‘தேசிய செவிலியர் மற்​றும் மகப்​பேறு மருத்​து​வப் பணி ஆணை​யம்’ அமைக்​கப்பட வேண்டும். ஆனால், ஆணை​யம் இன்​னும் அமைக்​கப்​பட​வில்​லை. எனவே, உடனடியாக ஆணை​யம் அமைக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா பிறப்​பித்த உத்​தர​வில், “இந்த மனுவையே மனு​தா​ரரின் கோரிக்கை மனு​வாகக் கரு​தி, 2 மாதங்​களுக்​குள் தேசிய செவிலியர் மற்​றும் மகப்​பேறு மருத்​து​வப் பணி ஆணை​யம் அமைப்​பது குறித்து மத்திய சுகா​தா​ரம் மற்​றும் குடும்ப நல அமைச்​சகம் தகுந்த முடிவை எடுக்க வேண்​டும். ஒரு​வேளை மனு​தா​ரர் கோரிய நிவாரணம் கிடைக்​க​வில்லை எனில், டெல்லி உயர் நீதிமன்றத்தை அவர்​ மீண்டும் அணுகலாம்” என கூறப்பட்டுள்ளது.

தேசிய செவிலியர் ஆணையத்தை 2 மாதத்தில் அமைக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
நேபாள வெள்ளத்தில் 100 பேர் உயிரிழப்பு: கும்பகோணத்தில் இருந்து சுற்றுலா சென்ற 57 பேர் மீட்பு?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in