ஏழுமலையானின் உண்டியல் காணிக்கையை மேஜை மீது ஏன் எண்ண கூடாது? - ஆந்திர உயர் நீதிமன்றம் கேள்வி

ஏழுமலையானின் உண்டியல் காணிக்கையை மேஜை மீது ஏன் எண்ண கூடாது? - ஆந்திர உயர் நீதிமன்றம் கேள்வி
Updated on
1 min read

அமராவதி: ​திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு தின​மும் பக்​தர்​கள் சராசரி​யாக ரூ.4 கோடி வரை உண்​டியல் மூலம் காணிக்கை செலுத்தி வரு​கின்​றனர். உண்​டியல் ஆதா​யம் ஆண்​டுக்கு சுமார் ரூ.1,500 கோடி​யாக உள்​ளது.

இந்​நிலை​யில், பல ஆண்​டு​களாக திருப்​பதி தேவஸ்​தான சீனியர் உதவி​யாள​ராக பணி​யாற்றி வந்த ரவிக்​கு​மார் எனும் ஊழியர், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி நாட்டு கரன்​சிகளை திருடிய​தாக கைது செய்​யப்​பட்​டார். இவரிடம் நடத்​திய விசா​ரணை​யில், இது​போல் சுமார் ரூ.100 கோடி வரை திருடி, சொத்​து சேர்த்​தது தெரிய​வந்​தது.

இது தொடர்​பான வழக்கை தற்​போது சிபிஐ அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர். இவ்​வழக்கு தொடர்​பாக, நேற்று ஆந்​திர உயர் நீதி மன்​றத்​தில் விசா​ரணை நடை​பெற்​றது. அப்​போது, ஏழு​மலை​யானின் காணிக்கை பணத்தை ஏன் தரை​யில் உட்​கார்ந்தே எண்ண வேண்​டும்? மேஜை, நாற்​காலி ஏற்​பாடு​களை ஏன் திருப்​பதி தேவஸ்​தானம் செய்ய கூடாது?

மேலும், வேட்​டிகளை மட்​டுமே ஏன் உடுத்த வேண்​டும்? இதற்​கென சிறப்பு சீருடையை திருப்​பதி தேவஸ்​தானம் ஏற்​பாடு செய்​ய​லாம் அல்​ல​வா? என்ற கேள்வி​களை உயர் நீதி​மன்​றம் எழுப்​பியது. இதற்கு நிர்​வாக அதி​காரி​யிடம் கேட்​டறிந்து பதில் அளிப்​ப​தாக தேவஸ்​தான தரப்பு வழக்​கறிஞர் கூறி​னார்.

ஏழுமலையானின் உண்டியல் காணிக்கையை மேஜை மீது ஏன் எண்ண கூடாது? - ஆந்திர உயர் நீதிமன்றம் கேள்வி
அயோத்தி ராமர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள துணை கோயில்களில் பிப்ரவரி முதல் தரிசனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in