அயோத்தி ராமர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள துணை கோயில்களில் பிப்ரவரி முதல் தரிசனம்

அயோத்தி ராமர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள துணை கோயில்களில் பிப்ரவரி முதல் தரிசனம்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்​தரபிரதேசத்தின் புனித நகர​மான அயோத்​தி​யில் ராமர் கோயில் புதி​தாக கட்​டப்​பட்​டுள்​ளது. கட்டுமானப் பணி நிறைவை குறிக்​கும் வகை​யில் கொடியேற்​றும் விழா நடை​பெற்​றது.

இந்நிலையில் இந்த கோயில் வளாகத்தில் உள்ள 15 துணை கோயில்​களுக்​கான பொது​மக்​கள் தரிசனம் பிப்​ர​வரி​யில் தொடங்க உள்​ளது. இதற்​கான முடிவு ​ராம ஜென்​மபூமி அறக்​கட்​டளை​யின் நிர்​வாகக் குழு கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்​டது.

இதுகுறித்து அறக்​கட்டளை​யின் தலை​வர் நிருபேந்​திர மிஸ்ரா மேலும் கூறிய​தாவது: ராமர் கோயில் வளாகத்​துக்​குள் அனு​ம​திச் சீட்​டுடன் மட்​டுமே தரிசனம் செய்ய முடி​யும். இதற்​காக ஒரு செயலி உரு​வாக்​கப்​படு​கிறது. இம்​மாத இறு​திக்​குள் அது தயா​ராகி​விடும். பிறகு பிப்​ர​வரி முதல் வாரத்​தில் துணை கோயில்​களில் தரிசன வசதி தொடங்​கப்பட வாய்ப்​புள்​ளது.

ராமர் கோயிலுக்கு அன்​றாடம் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் வருகை தரு​கின்​றனர். இதை மனதில் கொண்​டு, அயோத்​தி​யில் உள்ள  ராம் மருத்​து​வ​மனை​யில் மருத்​துவ வசதி​களை மேம்​படுத்தி வரு​கிறோம். 300 படுக்​கைகள் கொண்ட சூப்​பர் ஸ்பெஷாலிட்டி மருத்​து​வ​மனை கட்​டு​வதற்​கான ஏற்​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

மேலும் புற்​று​நோய் சிறப்பு மருத்​து​வ​மனைக்​கான கட்​டு​மானப் பணி​களும் விரை​வில் தொடங்கி 2 ஆண்​டு​களில் முடிவடை​யும். இந்த ஆண்டு மார்ச் அல்​லது ஏப்​ரலில் சர்​வ​தேச ராம் கதா அருங்​காட்​சி​யகம் பொது​மக்​களுக்கு திறக்​கப்​படும். இதில் ஏற்​கெனவே நான்கு டிஜிட்​டல் கேலரி​கள் கட்​டப்​பட்​டுள்​ளன. ஐந்​தாவது கேலரி​யின் பணி​யும் நடை​பெற்று வரு​கிறது. இந்த டிஜிட்​டல் கேலரி மற்​றும் உயர் தொழில்​நுட்ப அனு​மன் கேலரியை அமைக்​கும் பணி சென்னை ஐஐடி-​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது.

ராமர் கோயி​லின் 2-வது மாடி​யில் உள்ள அருங்​காட்​சி​யகத்​துக்​காக பல்​வேறு மொழிகளில் உள்ள ராமர் கதைகளின் அசல் பிர​தி​களைச் சேகரிக்க முயன்று வரு​கிறோம். இவற்​றில் சில பிர​தி​கள் கிடைத்​துள்​ளன. இந்த அரிய பிர​தி​களைப் பெறு​வதற்​காக நாடு முழு​வதும் பல்​வேறு மாநிலங்​களுக்கு அறக்​கட்​டளை கடிதம் அனுப்​பி​யுள்​ளது. ஸ்ரீ​ராம ஜென்​மபூமி கோயி​லால் அயோத்தி ஒரு உலகத் தரம் வாய்ந்த ஆன்​மிக சுற்​றுலாத் தலமாக வளர்ந்​து வரு​கிறது.இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

அயோத்தி ராமர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள துணை கோயில்களில் பிப்ரவரி முதல் தரிசனம்
காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேஷ் கல்மாடி காலமானார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in