“பாஜகவுக்கு உதவவே படிவம் 6-ஐ ஞானேஷ் குமார் மாற்றியுள்ளார்” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

“பாஜகவுக்கு உதவவே படிவம் 6-ஐ ஞானேஷ் குமார் மாற்றியுள்ளார்” -  ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Updated on: 
1 min read

புதுடெல்லி: பாஜக​வுக்கு உதவுவதற்​காகவே விண்​ணப்​பப் படிவம் 6-ஐ தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மாற்றியுள்ளார் என்று ராகுல்​ காந்தி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்​டும் என காங்​கிரஸ், ஆம் ஆத்​மி், சிஜேபி உள்​ளிட்ட கட்சிகள் வலி​யுறுத்தி வரு​கின்​றன. இந்​நிலை​யில், மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதி​வில் கூறிய​தாவது: எஸ்​ஐஆர் பணி​யில் படிவம் 6-ஐ சட்​ட​விரோத​மாக, ஒருதலைபட்​ச​மாக தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் மாற்​றி​யுள்​ளார்.

படிவம் 6-ஐ அவர் மாற்​றியது சந்​தேகத்​துக்கு இடமின்றி உறுதியாகி உள்​ளது. பாஜக​வுக்கு உதவவே தனது பதவியை முறை​கே​டாக ஞானேஷ் குமார் பயன்​படுத்​தி​யுள்​ளார். இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு ஞானேஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவ​காரத்​தில் எங்​களது போராட்டம் தொடரும். இவ்​​வாறு ​ராகுல் ​காந்​தி தெரி​வித்​துள்​ளார்​.

“பாஜகவுக்கு உதவவே படிவம் 6-ஐ ஞானேஷ் குமார் மாற்றியுள்ளார்” -  ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு: தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in