

குவாஹாட்டி: அசாம் மாநிலம் குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் நிமிஷா தாக்குரியா (22). இவர் தனது நண்பர் ஆசிப் அலியுடன் (26) ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை நிமிஷா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து ஆசிப் அலியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது மகள் போன் செய்து, என்னை அவர் கொன்றுவிடுவர் என்று ஒரு வித பதற்றத்துடன் தெரிவித்தார் என நிமிஷா தாய் தெரிவித்துள்ளார். அப்போது அவரிடமிருந்து போன் பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிமிஷாவின் பெற்றோர் போலீஸாரிடம் தகவல் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஆசிப் அலியிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.