

பிரதிநித்துவப்படம்
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள பெர்குசன் கல்லூரியில் 3-வது புத்தகக் கண்காட்சியை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தொடங்கி வைத்தார். வரும் 21-ம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 600 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் போஸ்டர்கள் காட்சிப்படுத்தல் பிரிவில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கின்னஸ் உலக சாதனை அமைப்பின் நடுவர் ஸ்வப்னில் தங்கிரிகர் கூறும்போது, “புனே புத்தகக் கண்காட்சியில் பழங்குடியினரின் வார்த்தைகளைக் (tribal words) கொண்டிருக்கும் 1,678 போஸ்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இது புதிய உலக சாதனை ஆகும். இதன் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட 1,365 போஸ்டர்களின் உலக சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.