எல் நினோ சவாலையும் மீறி 167 மில்லியன் டன் தானியம் உற்பத்தி

எல் நினோ சவாலையும் மீறி 167 மில்லியன் டன் தானியம் உற்பத்தி
Updated on: 
1 min read

புதுடெல்லி: எல் நினோ தாக்​கம் மற்​றும் தாமத​மான பரு​வ​மழையால் கடும் சவால்​கள் ஏற்​பட்​டபோதிலும், 2026-27 காரீஃப் பரு​வத்​தில் உணவுதானிய உற்​பத்தி 167.14 மில்​லியன் டன்​னாக இருக்​கும் எனக் கணிக்​கப்​பட்​டுள்​ளது.

இது கடந்த 5 ஆண்​டுகளின் சராசரி உற்​பத்​தியை விட 9.77 மில்லியன் டன் அதி​கம் என்று மத்​திய வேளாண் அமைச்​சர் சிவராஜ் சிங் சவு​கான் தெரி​வித்​தார். அவர் மேலும் கூறிய​தாவது: கடந்த 2025-26-ல் நாட்​டின் மொத்த உணவுதானிய உற்​பத்தி 378.54 மில்​லியன் டன் என்ற வரலாற்​றுச் சாதனையை எட்​டியுள்​ளது. செப்​டம்​பரில் அரசு நிர்​ணயித்த 196.21 மில்​லியன் டன் காரீஃப் இலக்கை விட தற்​போதைய கணிப்பு குறைவாக உள்​ளது.

எல் நினோ காரண​மாக 2026-27-க்கான முழு ஆண்டு உணவுதானிய உற்​பத்தி இலக்கு அப்​போது 373.93 மில்​லியன் டன்னாகக் குறைக்​கப்​பட்​டிருந்​தது. 2026 காரீஃப் பரு​வத்​தில் சிறுதானிய உற்​பத்தி 38.11 மில்​லியன் டன்​னாகவும், எண்​ணெய் வித்​துகள் உற்​பத்தி 23.95 மில்​லியன் டன்​னாகவும் இருக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. காரீஃப் அறு​வடை முடிந்த நிலை​யில், விவசாயிகள் தற்​போது கோதுமை உள்​ளிட்ட ரபி பருவ பயிர் விதைப்​பில் ஈடு​பட்​டுள்​ளனர்.

2025-26-ல் உணவுதானிய உற்​பத்தி, 2024-25-ல் இருந்த 357.73 மில்லியன் டன்​னி​லிருந்து 5.8% உயர்ந்து 378.54 மில்​லியன் டன்னாகச் சாதனை படைத்​துள்​ளது. அரிசி உற்​பத்தி 3.3% அதிகரித்து 155.15 மில்​லியன் டன்​னையும், கோதுமை உற்​பத்தி 3.5% அதி​கரித்து 122.06 மில்​லியன் டன்​னையும் எட்​டியுள்​ளது. இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.

எல் நினோ சவாலையும் மீறி 167 மில்லியன் டன் தானியம் உற்பத்தி
பெண் அலுவலரை மிரட்டியதாக புகார்: ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

X