ஜார்க்கண்டில் ‘ஜெய்ஷ்’ தீவிரவாதியின் தோழி கைது

ஜார்க்கண்டில் ‘ஜெய்ஷ்’ தீவிரவாதியின் தோழி கைது
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்​தின் புர்பா பர்​த​மான் மாவட்​டத்​தில் ஜெய்ஷ் இ முகம்​மது தீவிர​வாத அமைப்பை சேர்ந்த ஹமீம் மண்​டல் என்​பவரை சிறப்பு அதிரடிப் படை (எஸ்​டிஎப்) போலீ​ஸார் அண்​மை​யில் கைது செய்​தனர். மேற்கு வங்க முதல்​வர் சுவேந்து அதி​காரி மீது தாக்​குதல் நடத்த இவர் சதித் திட்​டம் தீட்​டி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் ஹமீம் மண்​டலிடம் நடத்​திய விசா​ரணை​யில் பெறப்​பட்ட தகவல்​கள் மற்​றும் ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் அவரது தோழி அர்​பிதா சர்க்​காரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். ஜார்க்​கண்ட் மாநிலத்​தின் சாகிப்​கஞ்ச் பகு​தி​யில் அர்​பிதா கைது செய்​யப்​பட்​டார்.

செல்​வாக்கு மிக்க நபர்​களுக்கு எதி​ராக ‘ஹனிடி​ராப்’ (காதல் வலை​யில் வீழ்த்தி மிரட்​டும்) உத்​தியை பயன்​படுத்​தும் நெட்​வொர்க்​கின் ஒரு பகு​தி​யாக அர்​பிதா செயல்​பட்​டிருக்​கலாம் என போலீ​ஸார் சந்​தேகிக்​கின்​றனர். அர்​பி​தா​வின் மொபைல் போன் மற்​றும் பிற டிஜிட்​டல் சாதனங்​களை பறி​முதல் செய்​துள்ள போலீ​ஸார் அவரது தகவல் தொடர்​பு​களை ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

ஜார்க்கண்டில் ‘ஜெய்ஷ்’ தீவிரவாதியின் தோழி கைது
தைபே ஓபன் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் தன்வி சர்மா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in