கங்கோத்ரி கோயிலுக்கு செல்ல பஞ்சகவ்யம் உட்கொள்வது கட்டாயம்

கங்கோத்ரி கோயிலுக்கு செல்ல பஞ்சகவ்யம் உட்கொள்வது கட்டாயம்
Updated on
1 min read

டேராடூன்: உத்​த​ராகண்​டில் சார் தாம் யாத்​திரை தொடங்​கி​யுள்ள நிலை​யில், இந்து அல்​லாதவர்​கள் கோயிலுக்​குள் நுழைவதற்கு சில கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன. கங்​கோத்ரி கோயில் நிர்​வாகக் குழு​வின் தீர்​மானத்​தின் ​படி, இந்து அல்​லாதவர்​கள் ‘பஞ்​சகவ்​யம்’ உட்​கொண்​டால் மட்​டுமே கோயிலுக்​குள் நுழைய அனு​ம​திக்​கப்​படு​வார்​கள்.

அவர்​கள் சனாதன தர்​மத்தை பின்​பற்​றுகிறார்​கள் என்​பதை உறு​திப்​படுத்த, பசு​வின் சிறுநீர் உள்​ளிட்ட பொருட்​கள் கலந்த பஞ்​சகவ்​யத்தை உட்​கொள்​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ள​தாக கங்​கோத்ரி கோயில் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. பசு​வின் பால், தயிர், நெய், கோமி​யம் (பசு​வின் சிறுநீர்) மற்​றும் பசு​வின் சாணம் ஆகிய 5 பொருட்​களு​டன் கங்கை நீரும் கலந்த கலவையே பஞ்​சகவ்​யம் ஆகும்.

இதுகுறித்து யமுனோத்ரி கோயில் நிர்​வாக செய்​தித் தொடர்​பாளர் புருஷோத்​தம் உன்​னியல் கூறும்​போது, “நாங்​கள் பல காலங்​களாக பஞ்ச கவ்ய பாரம்​பரி​யத்​தைப் பின்​பற்று​கிறோம். சனாதனத்​தின் மீது ஈடு​பாடு இல்​லாதவர்​களின் வருகை அதி​கரித்து வரு​கிறது. எனவே, சனாதனிகள் மட்​டுமே சன்​ன​தி​யில் தரிசனம் செய்ய இந்த நடவடிக்கை அனு​ம​திக்​கும்​” என்​றார்​.

கங்கோத்ரி கோயிலுக்கு செல்ல பஞ்சகவ்யம் உட்கொள்வது கட்டாயம்
கார்கே பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in