நாட்டில் புதிதாக 4 தொழிலாளர் சட்டங்கள் அமல்: ஒரு வாரத்தில் விதிமுறைகள் வெளியீடு

மத்​திய அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா

மத்​திய அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா

Updated on
1 min read

புதுடெல்லி: நாட்​டில் புதி​தாக 4 தொழிலா​ளர் சட்​டங்​களை மத்​திய அரசு நேற்று முதல் அமலுக்​குக் கொண்டு வந்​துள்​ளது. இதற்​கான விதி​முறை​கள் அடுத்த ஒரு வாரத்​தில் வெளி​யாகும் என்று தெரி​கிறது.

நாட்​டில் தற்​போது நடை​முறை​யில் உள்ள 29 மத்​திய தொழிலா​ளர் சட்​டங்​களை தொகுத்​து, புதி​தாக 4 புதிய தொழிலா​ளர் சட்​டங்​களை (Labour Codes) அதி​காரப்​பூர்​வ​மாக மத்​திய அரசு நடை​முறைப்​படுத்​தி​யுள்​ளது.

நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு மேற்​கொள்​ளப்​பட்ட மிகப்​பெரிய தொழிலா​ளர் சீர்​திருத்​த​மாக இது பார்க்​கப்​படு​கிறது. இந்​தப் புதிய சட்ட கட்​டமைப்​பு, பல தசாப்​தங்​களாக பழமை​யான, சிதறி​யுள்ள விதி​களை சுலப​மாக்​குதல், தொழிலா​ளர்​களின் நலனை மேம்​படுத்​துதல், பாது​காப்பு அம்​சங்​களை பலப்​படுத்​துதல், தொழிலா​ளர் நடை​முறை​களை உலகளா​விய சிறந்த முறை​களுக்கு இணை​யாகக் கொண்டு வருதல் ஆகிய​வற்றை முதன்மை இலக்​காக வைத்து கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

தொழிலா​ளர் ஊதிய சட்​டம்​-2019, தொழில்​துறை உறவு சட்​டம்​-2020, சமூகப் பாது​காப்​புக்​கான சட்​டம்​-2020, சுகா​தா​ரம், பாது​காப்​பு, பணி நிலை​மைச் சட்​டம்​-2020 ஆகிய 4 புதிய சட்​டங்​கள் தற்​போது அமலுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளன.

இந்த சட்ட மசோ​தாக்​கள் நான்​கும் கடந்த 5 ஆண்​டு​களுக்​கும் மேலாக நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்டு அமல்​படுத்​தப்​ப​டா​மல் இருந்​தன.

இந்​நிலை​யில் நேற்று முதல் இந்த சட்​டங்​கள் அமலுக்கு வந்​துள்​ளன. இதுதொடர்​பான விதி​முறை​கள் அடுத்த வாரத்​தில் மத்​திய தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சகம் வெளி​யிடும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இத்​தகவலை மத்​திய தொழிலா​ளர் மற்​றும் வேலை​வாய்ப்​புத்​துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா தனது எக்ஸ் சமூக வலை​தளத்​தில் தெரி​வித்​துள்​ளார்.

<div class="paragraphs"><p>மத்​திய அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா</p></div>
மாவு அரைவை இயந்திரத்தில் வெடிகுண்டு தயாரித்த மருத்துவர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in