

புதுடெல்லி: டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய காஷ்மீரின் புல்வமாவைச் சேர்ந்த மருத்துவர் முஜம்மில் ஷகீல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் அவர் வாடகைக்கு தங்கியிருந்த அறையில் மாவு அரைவை இயந்திரத்தை வைத்து வெடிகுண்டுக்கு தேவையான ரசாயன பொருட்களை தயாரித்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அங்கிருந்துதான் போலீஸார் 360 கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் இதர வெடிபொருட்களை கைப்பற்றினர்.
தீவிரவாத மருத்துவர் முஜம்மில் பயன்படுத்திய மாவு அரைவை இயந்திரம் மற்றும் இதர மின் சாதனங்களை ஹரியானா பரிதாபாத்தில் உள்ள டாக்ஸி ஓட்டுநர் ஒருவரின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.