

சமஸ்தீபூர் (பிஹார்): பிஹாரின் ஜமூய் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு மாணவிக்கு மர்மக் கும்பல் பாலியல் தொல்லை கொடுத்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமஸ்தி பூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு சிறுமியும் சிறுவனும் வழியில் நிறுத்திவிட்டு, புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் வெளியானது. இதைத்தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், 4 பேரை கைது செய்தனர்.