

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் அமர்வு என்பதால், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உரையாற்றினார்.
அப்போது, டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இருக்கையை விட்டு எழுந்து நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இருக்கையில் அமருமாறு சபாநாயகர் விஜேந்திர குப்தா கேட்டுக்கொண்டார். ஆனால், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து 4 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.