

பிரதிநிதித்துவப் படம்
புதுடெல்லி: இந்தியப் போட்டி ஆணையத்தின் (சிசிஐ) முதல் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான தனேந்திர குமார், டெல்லி ஹவுஸ் காஸ் பகுதியில் வசித்தார்.
நேற்று முன்தினம் இரவு சுமார் 11:18 மணியளவில் வீட்டில் ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில்5 பேர் இருந்துள்ளனர். தகவலறிந்து போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 80 வயதான தனேந்திர குமாரும், அவரது மகனும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தனேந்திர குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.