முஸ்லிம் பெண்ணுக்கு போர்வை தர மறுத்த முன்னாள் பாஜக எம்.பி.

முன்னாள் பாஜக எம்.பி. சுக்பீர் சிங் ஜானபுரியா

முன்னாள் பாஜக எம்.பி. சுக்பீர் சிங் ஜானபுரியா

Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் டோங்க் சவாய் மாதோபூர் மக்களவை தொகுதியில் இருந்து பாஜக சார்பில் கடந்த 2014 முதல் 2024 வரை 2 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுக்பீர் சிங் ஜானபுரியா.

இவர் தனது தொகுதியில் பொது மக்களுக்கு போர்வை விநியோகம் செய்தபோது வரிசையில் வந்த ஒரு பெண்ணிடம் அவரது பெயரை கேட்டுள்ளார். அப்பெண் முஸ்லிம் பெயரை கூறியதும் அவருக்கு போர்வை வழங்க வேண்டாம் என தனது உதவியாளரிடம் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுக்பீர் சிங்கின் இந்த செயலுக்கு அத்தொகுதியின் தற்போதைய காங்கிரஸ் எம்.பி.ஹரிஷ் சந்திர மீனா கண்டனம் தெரிவித்துள்ளார். "இது நாட்டின் சமூக கட்டமைப்பை அழிக்கும் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. இந்த செயல் வெட்கக்கேடானது” என்று அவர் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>முன்னாள் பாஜக எம்.பி.&nbsp;சுக்பீர் சிங் ஜானபுரியா</p></div>
அரசு ஸ்டான்லி மருத்துவமனை​ டீன் அறையில் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் காயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in