அரசு ஸ்டான்லி மருத்துவமனை​ டீன் அறையில் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் காயம்

அரசு ஸ்டான்லி மருத்துவமனை​ டீன் அறையில் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் காயம்
Updated on
1 min read

சென்னை: அரசு ஸ்டான்லி மருத்​து​வக் கல்​லூரி மருத்துவமனை ராயபுரம் பகுதியில் செயல்​பட்டு வரு​கிறது. இங்கு 1,000-க்​கும் மேற்​பட்​டோர் உள்​நோ​யாளி​களாக சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

தின​மும் ஆயிரக்​கணக்​கானோர் புறநோ​யாளி​களாக சிகிச்​சைக்கு வந்து செல்​கின்​றனர். மருத்துவமனை வளாகத்​தில் உள்ள பழமை​யான கட்​டிடங்​களை புனரமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

மருத்துவமனை டீன் அறை​யின் வரவேற்பு பகு​தி​யில் நேற்று மேற்கூரை திடீரென்று பெயர்ந்து விழுந்​த​தில், அங்​கிருந்த டீனின் உதவி​யாளர் காவியா என்​பவர் காயமடைந்​தார். உடனே அரு​கில் இருந்​தவர்​கள் அவரை மீட்டு சிகிச்​சைக்​காக சேர்த்​தனர்.

தகவல் அறிந்து வந்த பொதுப்​பணித் துறை​யினர், அந்த பகு​தி​யில் பொது​மக்​கள் யாரும் செல்​லாமல் இருக்க தடுப்​பு​களை வைத்து அடைத்​தனர். இது தொடர்​பாக மருத்துவமனை போலீ​ஸார் வி​சா​ரணை நடத்தி வருகின்றனர்.

அரசு ஸ்டான்லி மருத்துவமனை​ டீன் அறையில் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் காயம்
கோடை விடுமுறை விரைவு ரயில்​ டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in