6 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் வந்த ஜெகன்

6 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் வந்த ஜெகன்
Updated on
1 min read

ஹைதராபாத்: ஆந்​திர மாநில முன்​னாள் முதல்​வர் ஜெகன், சொத்​துக்​கு​விப்பு வழக்கை 2011-ம் ஆண்டு முதல் எதிர்​கொண்டு வரு​கிறார். இவ்​வழக்​கில் சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்டு அவரின் சில சொத்​துகளை முடக்​கியது மட்​டுமல்​லாது இவரை கைதும் செய்​தனர்.

இதனை தொடர்ந்து ஜெகன்​மோகன் ரெட்டி 16 மாதங்​கள் வரை சிறைச்​சாலை​யில் அடைக்கப்​பட்​டு, 2013-ம் ஆண்டு நவம்​பர் மாதத்​தில் ஜாமீனில் வெளியே வந்​தார்.

அவர், 2019-ல் ஆந்​திர முதல்​வ​ராக பதவி​யேற்​றார். இந்​நிலை​யில், அரசு பணி​களை பார்க்​க​ நேரம் சரி​யாக இருப்​ப​தால், நீதி​மன்​றத்​தில் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க ஜெகன் கோரி​னார்.

கடந்த 2024-ல் நடந்த பேரவை தேர்​தலில் ஒய்​.எஸ்​.ஆர் காங்​கிரஸ் கட்சி மாபெரும் தோல்​வியை சந்​தித்​தது. இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 6 ஆண்​டு​களுக்கு பிறகு, ஜெகன்​மோகன் ரெட்டி நாம்​பல்லி சிபிஐ நீதி​மன்​றத்​தில் நேற்று நேரில் ஆஜரா​னார்.

6 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் வந்த ஜெகன்
19 பெண்களை தீவிரவாதிகளாக்கிய ஷாகின்: டெல்லி குண்டுவெடிப்புக்கு பின் அனைவரும் மாயம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in