ரஷ்யாவில் இந்தியப் பொறியாளர் கைது - மீட்கக் கோரி மனைவி கண்ணீர் வீடியோ

ராணுவத்தில் சேர வற்புறுத்தல்?
ரஷ்யாவில் இந்தியப் பொறியாளர் கைது - மீட்கக் கோரி மனைவி கண்ணீர் வீடியோ
Updated on
1 min read

மாஸ்கோ / புதுடெல்லி: மாஸ்​கோ​வில் ரஷ்ய காவல்துறையினரால் கைது செய்​யப்​பட்​டுள்ள கான்​பூரைச் சேர்ந்த இந்தியப் பொறியாளர் ஒரு​வரை, அந்​நாட்டு ராணுவத்​தில் கட்​டாய​மாக சேர்க்க முயற்சி நடப்​ப​தாக அவரது மனைவி குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

உத்​தரப் பிரதேசம் கான்​பூரைச் சேர்ந்த பொறி​யாளர் சந்​தன் குப்தா, நொய்டா நிறு​வன​மான ஃபிளெக்ஸ் ஃபிலிம்​ஸின் மாஸ்கோ கிளை​யில் பணி​யாற்றி வரு​கிறார். தனது மனைவி ஸ்நேகா குப்தா மற்​றும் 10 வயது மகனுடன் அவர் மாஸ்​கோ​வில் வசித்து வரு​கிறார். கடந்த செப்​டம்​பர் 5-ம் தேதி இரவு, மாஸ்கோவின் சிவப்பு சதுக்க பகு​தி​யில் பொது இடத்​தில் மது அருந்​தி, ஆம்புலன்ஸ் கண்​ணாடியை உடைத்​த​தாக சந்​தன் குப்தா மற்​றும் அவரது நண்​பர் ஆஷிஷ் இரு​வரை​யும் ரஷ்ய காவல்துறையினர் கைது செய்​தனர்.

தனது கணவர் எந்​தத் தவறும் செய்​யாமல் கைது செய்யப்பட்டுள்ள​தாகக் கூறிய ஸ்நேகா குப்​தா, உக்​ரைன் போரில் பங்​கேற்க அவரை ரஷ்ய ராணுவத்​தில் சேரு​மாறு காவல்​துறை​யினர் கட்​டாயப்​படுத்​து​வ​தாகக் குற்​றம் சாட்​டி​னார். தன் கணவரைப் பாது​காப்​பாக மீட்க பிரதமர் நரேந்​திர மோடி​யும் உத்தரப் பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்​தும் உடனடி​யாகத் தலை​யிட வேண்​டும் எனக் கண்​ணீருடன் காணொலி மூலம் வேண்​டு​கோள் விடுத்​தார்.

இதுகுறித்து தகவல் தெரி​வித்த அரசு வட்​டாரங்​கள், மாஸ்​கோ​வில் உள்ள இந்​திய தூதரகம் சந்​தன் குப்தா மற்​றும் ஆஷிஷை விடுவிக்க உள்​ளூர் அதி​காரி​களிடம் வலி​யுறுத்​தி​யுள்​ள​தாக​வும், அவர்​களைச் சந்​திக்க அனு​மதி கோரி​யுள்​ள​தாக​வும் தெரி​வித்​தன.

நல்ல வேலை தரு​வ​தாகக் கூறி ரஷ்​யா​வுக்கு அழைத்​துச் செல்லப்பட்ட இந்​தி​யர்​கள் கட்​டாய​மாக ராணுவத்​தில் சேர்க்கப்படும் சூழல் நில​வுவ​தாக கூறப்​படும் நிலை​யில், இச்​சம்​பவம் நடந்​துள்​ளது. இது​வரை ரஷ்ய ராணுவத்​தில் சேர்ந்த 227 இந்தி​யர்​களில் 139 பேர் விடுவிக்​கப்​பட்ட நிலை​யில், 51 பேர் உயிரிழந்​துள்​ள​தாக​வும், மீத​முள்​ளவர்​களை மீட்க ரஷ்​யா​வுடன் பேச்​சு​வார்த்தை நடப்​ப​தாக​வும் இந்​தி​ய வெளி​யுறவு அமைச்​சகம்​ தெரி​வித்​துள்​ளது.

ரஷ்யாவில் இந்தியப் பொறியாளர் கைது - மீட்கக் கோரி மனைவி கண்ணீர் வீடியோ
புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி உட்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in